சமையல் குறிப்புகள்! ஈஸி தந்தூரி சிக்கன்
ஈஸி தந்தூரி சிக்கன் சிக்கன் - ஒரு கிலோ தந்தூரி மசாலா - 5 தேக்கரண்டி வினிகர் - 3 மூடி உப்பு - தேவைக்கு தந்தூரி அடுப்புக்கு: செங்கல் - .4 மண...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_783.html
ஈஸி தந்தூரி சிக்கன்
சிக்கன் - ஒரு கிலோ
தந்தூரி மசாலா - 5 தேக்கரண்டி
வினிகர் - 3 மூடி
உப்பு - தேவைக்கு
தந்தூரி அடுப்புக்கு:
செங்கல் - .4
மணல் - சிறிது
அடுப்பு கரி - சிறிது (1/2 கிலோ)
சைக்கிள் கம்பி - 8
கெரோசின் - தேவைக்கு
முழு கோழியை நான்கு துண்டாக வெட்டி கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். பின் அதில் தந்தூரி மசாலா, வினிகர், உப்பு சேர்த்து 3 மணி நேரம் ஊறவிடவும்.
வீட்டின் பின்புறம் கொஞ்சம் மணலை பரத்தி அதன் மேல் செங்கலை வைத்து அதனுள் கரிதுண்டை போட்டு கெரோசினை ஊற்றி பற்ற வைக்கவும். நல்லா கனலாக(கங்காக)வேண்டும்
பின் செங்கலின் மேல், கம்பிகளை குறுக்கும் நெடுக்குமாக படத்தில் உள்ளது போல் அடுக்கவும்.
கம்பியின் மேல் மசாலா தடவி ஊற வைத்திருக்கும் கோழி துண்டுகளை வைத்து அடுக்கவும்.
ஒரு அகலமான பாத்திரம் கொண்டு மூடவும். இரு பக்கமும் திருப்பி போட்டு வேக விடவும்
இப்பொழுது சிக்கன் தந்தூரி ரெடி. (கோழி வேக 20 நிமிடம் ஆகும்)
1 comment
//பின் செங்கலின் மேல், கம்பிகளை குறுக்கும் நெடுக்குமாக படத்தில் உள்ளது போல் அடுக்கவும்.//
Where is the Picture ?
Post a Comment