சமையல் குறிப்புகள்! ரா பனானா வெஜ் ரோல்
ரா பனானா வெஜ் ரோல் தேவையான பொருட்கள்: கேரட் துருவியது, வாழைக்காய் வேக வைத்துத் துருவியது-தலா1 கப், கடுகு, உளுந்து (தாளிக்க)-2 சிட்டிகை, இஞ்...

https://pettagum.blogspot.com/2011/05/blog-post_6116.html
ரா பனானா வெஜ் ரோல்
தேவையான பொருட்கள்: கேரட் துருவியது, வாழைக்காய் வேக வைத்துத் துருவியது-தலா1 கப், கடுகு, உளுந்து (தாளிக்க)-2 சிட்டிகை, இஞ்சி, பச்சை மிளகாய் விழுது-சிறிது, ரோலின் மீது தடவுவதற்கு எண்ணெய்- ஒரு டீஸ்பூன், வெங்காயம் பொடியாக நறுக்கியது-½ கப், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தூவுவதற்கு-ஒரு கைப்பிடி, மிளகாய்த் தூள், சாட் மசாலா, லெமன் ஜூஸ்-தலா ½ டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு
செய்முறை : கடுகு உளுந்து தாளித்து, தேவையான பொருட்களை எல்லாம் உப்புடன் சேர்த்து ஒன்றாகப் பிசையவும். இந்த மாவை நிள வாக்கில் உருட்டிக் கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளின் மீது எண்ணையைத் தடவி, தவாவின் மேல் பரத்தி, குறைந்த தீயில் வைத்து நன்கு சிவக்கும் வரை புரட்டிப் போடவும்.
ஸ்பெஷல் : கலோரி குறைவான, சத்துக்கள் நிறைந்த டீ டைம் ரெசிபி.
Post a Comment