பெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...

பெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்... * கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருக...

பெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்... * கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்சம் பழம் மலிவாகக் கிடைக்கும் போது வாங்கிப் பிழிந்து ஃப்ரீசரில் ஐஸ் ட்ரேயில் வைத்து விடுங்கள். தேவையான போது உபயோகித்துக் கொள்ளலாம். * எண்ணெயை மொத்தமாக வாங்கி வைக்கும் போது அதில் காரல் வாசனை எடுக்காமலிருக்க, அதில் நான்கைந்து காய்ந்த மிளகாய்களைப் போட்டு வைத்து விடுங்கள். * பழைய சாக்ஸுகளைத் துடைப் பத்தின் கைப்பிடிப் பக்கம் மாட்டிக் கட்டி விட்டால் துடைப்பம் கைகளை உறுத்தாமல் இருக்கும். * உளுந்து நிறைய வாங்கி விட்டீர்களா? அவற்றின் மேல் கொஞ்சம் எண்ணெயைத் தடவி வெயிலில் காய வைத்து எடுத்து வையுங்கள். பூச்சிகள் வராது. * காலையில் செய்கிற காய்கறிகள் மீந்து விட்டனவா? பஜ்ஜி மாவில் அவற்றைக் கலந்து எண்ணெயில் போட்டுப் பொறித்தெடுத்தால் வித்தி யாசமான சுவையுடன் தூள் பஜ்ஜி கிடைக்கும். * கொசுவை விரட்ட உபயோகிக் கும் மேட் தீர்ந்து விட்டதா? முதல் நாள் உபயோகித்த மேட்டின் மேல் சில துளிகள் வேப்பெண்ணெயை விட்டு மறுபடி மிஷினில் வைத்து விடுங்கள். கொசு வராது. * காரணமே இன்றி திடீரென வயிற்றை வலிக்கிறதா? உடனே இரண்டு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டுக் கொண்டு, கொஞ்சம் தண் ணீரைக் குடித்து விட்டால் வலி பறந்து விடும். * காலை அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசரத்தில் கைக்குட்டை யைத் துவைக்க மறந்து விட்டீர்களா? அதை ஒரு முறை அலசி, சமைத்து வைத்துள்ள சூடான பாத்திரங்களின் மேல் சிறிது நேரம் பரப்பி வைத்து விடுங்கள். பட்டாகக் காய்ந்து விடும். * சைனஸ் தொல்லையால் படுக்கும் போது தலைவலிக்கிறதா? படுக்கும் போது தலையணையை ஒரு நியூஸ் பேப்பரால் சுற்றி விட்டு அதன் மேல் தலை வைத்துப் படுங்கள். வலி இருக்காது. * ரசம் கொதித்து இறக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் கறிவேப் பிலைப் பொடியைத் தூவி இறக் கினால் வாசனை ஊரைத் தூக்கும். தனியே கறிவேப்பிலை போட வேண் டிய அவசியமுமில்லை. * மிக்சியில் மாவு அரைக்கும் போது அது சீக்கிரமே சூடாகி விடும். இதைத் தவிர்க்க, மாவில் கொஞ்சம் ஐஸ் வாட்டர் தெளித்து அரைக்கலாம். * கூடியவரையில் சமையலை இரும்புப் பாத்திரத்திலேயே செய் யுங்கள். அதனால் நம் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைத்து விடும். * அப்போதே அரைத்த தோசை மாவில் தோசை ஊற்றினால் கசக்கும். அதைத் தவிர்க்க அதில் மோர் கலப் பதற்குப் பதில் பழைய சாதத்துத் தண்ணீ ரைக் கொஞ்சம் கலந்து செய்யலாம். * தக்காளிப் பழங்கள் மீந்து விட்டால் அதை அரைத்து வடிகட்டி தோசை மாவுடன் சேர்த்து, கொஞ்சம் காய்கறி களை நறுக்கிப் போட்டு தோசையாக ஊற்றிக் கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். * காலையில் செய்த உருளைக்கிழங்கு மசாலா மீந்து விட்டதா? அதை லேசாக சூடு படுத்தி, பிரெட் அல்லது பன் உள்ளே வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். * தேங்காய் சாதம் செய்கிறீர்களா? அத்துடன் வேர்க் கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு, காய்கறிகளையும் வதக்கிப் போட்டுச் செய்யலாம். * பூண்டு குழம்பு செய்யப் போகிறீர்களா? பூண்டை எப்படி உரிப்பது என்று மலைக்க வேண்டாம். முதல் நாள் இரவே பூண்டை ஃப்ரிட்ஜினுள் வைத்து விடுங்கள். அடுத்த நாள் உரிக்க சுலபமாக இருக்கும். * அரிவாள் மனையின் முகப்புப் பகுதி யில் ஒரு வெங்காயத்தைக் குத்தி வைத்து விட்டுப் பிறகு நறுக்கினால் கண்ணீர் வராது. * புதினாவை மிக்சியில் அரைத்து கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி, பூரி போன்றவை செய்தால் வித்தியாசமான சுவையுடனும், நிறத்துடனும் இருக்கும். * மாதவிலக்கு சரியாக வராத பெண்கள் மாதவிலக்காகும் போது முதல் மூன்று நாட்களுக்கு கொள்ளுக் கஷாயம் வைத்துக் குடிக்கலாம். மாதவிலக்கும் முறைப்படும். உடலின் ஊளைச்சதைகளும் குறையும். * ரவை தோசை செய்யும் போது அதில் ஒரு ஸ்பூன் சோம்பை அரைத்துக் கலந்து செய்தால் வாசனை பிரமாதமாக இருக்கும். * பச்சை மிளகாயைக் காம்பு நீக்கி விட்டு, ஒரு பிளாஸ்டிக் டப்பாவினுள் போட்டு மூடி வைத்து விட்டால் ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும். * சீயக்காய் வாங்கி அரைக்கும் போது அத்துடன் சாதாரணமாகச் சேர்க்கும் பொருட்களுடன் ஒரு கைப்பிடியளவு வேப்பிலை யையும் போட்டு அரைக்க பேன், பொடுகுத் தொல்லை இருக்காது.

Related

வீட்டுக்குறிப்புக்கள் 4054350160770015581

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item