மல்லூர் சிக்கன் தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 100 கிராம் காய்ந்த மிளகாய் - 15 மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவைய...

மல்லூர் சிக்கன்
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 15
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
தாளிக்க பட்டை - 2
லவங்கம் - 2
செய்முறை
* சிக்கனைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கவும்.
* வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
* பின்பு நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும், தொடர்ந்து காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும்.
* இப்போது சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி பின்னர் வேகுமளவு சிறிதளவு நீர் ஊற்றவும்.
* சிக்கன் வெந்தவுடன் போதுமான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
* சிக்கன் டிரை ஆனதும் இறக்கி விடவும்.
* இதை வெறும் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாகவும், காரம் மிகுந்ததாகவும் இருக்கும்.
Post a Comment