உணவே மருந்து! வெஜிடபிள் கூட்டு
உணவே மருந்து! வெஜிடபிள் கூட்டு தேவையானவை: கூட்டுக்குரிய காய்கறிகளில் ஏதேனும் ஒன்று பொடியாக நறுக்கியது & ஒரு கப், பாசிப்பருப்பு & 3...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2860.html
உணவே மருந்து!
வெஜிடபிள் கூட்டு
தேவையானவை: கூட்டுக்குரிய காய்கறிகளில் ஏதேனும் ஒன்று பொடியாக நறுக்கியது & ஒரு கப், பாசிப்பருப்பு & 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை, பச்சைமிளகாய் & 2, உளுந்து & 2 டீஸ்பூன், சீரகம் & அரை டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.
தாளிக்க: கடுகு & கால் டீஸ்பூன், சீரகம் & கால் டீஸ்பூன், உளுந்து & அரை டீஸ்பூன், எண்ணெய் & ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிது.
செய்முறை: பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேக விடவும். பிறகு, அதனுடன் காய்கறி, சிறிது தண்ணீர், உப்பு, கீறிய பச்சைமிளகாய் சேர்த்து, குறைந்த தீயில் நன்கு வேக விடவும். வெறும் கடாயில் உளுந்து, சீரகத்தை தனித் தனியே வாசனை வரும்வரை வறுத்து, பொடித்துக் கொள்ளவும். வெந்த காய்கறியுடன் இந்தப் பொடியை சேர்த்து, ஒரு நிமிடம் கொதிக்க விட்டு, இறக்கி, தாளிக்கும் பொருட்களை தாளித்து சேர்க்கவும்.
Post a Comment