சமையல் குறிப்புகள்! ‘ஸ்டஃப்டு’ டொமேடோ
‘ஸ்டஃப்டு’ டொமேடோ தேவையானவை: ஆப்பிள் தக்காளி & 4, இஞ்சி & ஒரு பெரிய துண்டு, ஓமம் & ஒரு டீஸ்பூன், மல்லித்தழை & ஒரு கைப்பிட...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_6583.html
‘ஸ்டஃப்டு’ டொமேடோ
தேவையானவை: ஆப்பிள் தக்காளி & 4, இஞ்சி & ஒரு பெரிய துண்டு, ஓமம் & ஒரு டீஸ்பூன், மல்லித்தழை & ஒரு கைப்பிடி, மிளகுதூள், சீரகத்தூள் & தலா கால் டீஸ்பூன், எண்ணெய் & தேவையான அளவு.
செய்முறை: ஆப்பிள் தக்காளியை நான்காகக் கீறி (முழுவதுமாக, நான்கு துண்டுகளாக வெட்டிவிடக்கூடாது) வைத்துக்கொள்ளவும். இஞ்சி, ஓமம், மல்லித்தழை, மிளகு & சீரகத்தூள் எல்லாவற்றையும் நன்கு நைஸாக அரைக்கவும் (அம்மியில் அரைத்தால் மிக நன்றாக இருக்கும்).
ஒவ்வொரு தக்காளிக்குள்ளும், அரைத்த மசாலாவை ‘ஸ்டஃப்’ செய்யவும். வாணலியை அடுப்பில் வைத்து, ‘ஸ்டஃப்டு’ தக்காளியைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விடவும். வெந்தவுடன் எடுக்கவும். எல்லா தக்காளிகளையும் இதே போல செய்து, சூடாகப் பரிமாறவும். பிரெட், பூரிக்கு ஏற்ற சைட் டிஷ் இது.
பயன்: ஆப்பிள் போன்ற கன்னம் பெற இந்தத் தக்காளி டிஷ் உதவும்.
Post a Comment