ரசிக்க.. ருசிக்க..! பழக் கொழுக்கட்டை
பழக் கொழுக்கட்டை தேவையான பொருள்கள் : மாம்பழம் - 2 பெரியது, ஆப்பிள் - 1 பெரியது. கடலைப் பருப்பு - 200 கிராம், அரிசி மாவு - 1 கிண்ணம், சோள ம...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_1303.html
பழக் கொழுக்கட்டை
தேவையான பொருள்கள் :
மாம்பழம் - 2 பெரியது,
ஆப்பிள் - 1 பெரியது.
கடலைப் பருப்பு - 200 கிராம்,
அரிசி மாவு - 1 கிண்ணம்,
சோள மாவு - 1 கிண்ணம்,
முந்திரி -லு கிண்ணம்,
தேங்காய்ப் பால் -1 கிண்ணம் (கெட்டியானது),
மல்லி, கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கு,
சோடா உப்பு - சிறிது,
மஞ்சள் கலர் - சிறிதளவு,
கேசரிப் பொடி
வெங்காயம், பச்சை மிளகாய் - தாளிப்பதற்கு,
கடுகு - சிறிது,
எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை :
மாம்பழம், ஆப்பிளை தோல் சீவி கொட்டை, விதை நீக்கி, சீவலில் சீவி வைக்கவும். கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு ஊறவைத்து கெட்டியாக அரைக்கவும்.
அரைத்த மாவை ஆவியில் வேக வைத்து எடுத்து பிசிறி வைக்கவும். கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித் தழை, கறிவேப்பிலை தாளித்து சிறிது உப்புப் போட்டு இறக்கி பழ சீவலில் கொட்டிக் கிளற வேண்டும்.
இதனைப் பிசிறி வைத்துள்ள மாவில் கலந்து நன்கு பிசைந்து வைக்கவும். அரிசி மாவு, சோள மாவு, சோடா உப்பு, உப்பு, கலர் பொடி இவற்றைக் கலந்து தேங்காய்ப் பால் விட்டுப் பிசைந்து சப்பாத்திகளாகச் சிறிய அளவு பரத்தி பழ பூரணத்தை உள்ளே வைத்து தூக்கணாங்குருவிக் கூடு போல் செய்து மூடி இட்லிப் பானையில் ஆவியில் வேகவைத்தும் எடுக்கலாம். எண்ணெய் வைத்து தேங்காய்த் துருவலில் புரட்டி எடுத்துப் பொரித்தும் கொடுக்கலாம்.
----------------------------------------------------------------------------------------
Post a Comment