ரிச்... சாண்ட்விச்! -- சமையல் குறிப்புகள்,

ஒ ரு காலத்தில் நோயாளிகளின் உணவாய் இருந்த பிரெட், இன்று இளைய தலைமுறையின் விருப்ப உணவாகிவிட்டது. ஸ்நாக்ஸ் கடைக...

ரு காலத்தில் நோயாளிகளின் உணவாய் இருந்த பிரெட், இன்று இளைய தலைமுறையின் விருப்ப உணவாகிவிட்டது. ஸ்நாக்ஸ் கடைகளிலும் இப்போது சாண்ட்விச்தான் செம ஹிட். இது செய்வதும் சுலபம், உடலுக்கும் ஊட்டம்! 
ஐஸ்க்ரீம் சாண்ட்விச், சாக்லெட் சாண்ட்விச், சில்லி சீஸ் சாண்ட்விச் எனப் பல வகைகள், சுவைக்கத் தூண்டும் விதத்தில் கிடைக்கின்றன. சென்னை, கே.கே.நகர் ஸ்நாக் - ஸாக் உரிமையாளர்களில் ஒருவரான விஜய் சொல்கிறார்
''சாண்ட்விச் மிக சிம்பிளான உணவு.  டிஷ் சில்லி சாஸ், டொமெட்டோ சாஸ் டேஸ்டாக இருக்கும். விருப்பம் இல்லை எனில், சாட் மசாலா தவிர்க்கலாம். வளரும் குழந்தைகளுக்கு சீஸ், சாக்லெட், பிரெட், காய்கறிகள் மிகவும் நல்லது.  
நடுத்தர வயதினர் சீஸைத் தவிர்த்து, பனீரை சேர்த்துக்கொள்ளலாம். பீன்ஸ், கேரட், பீட்ரூட், கோஸ் போன்ற காய்கறிகளையும் துருவிச் சேர்க்கலாம். இனிப்பு, புளிப்பு, காரம் என அத்தனை சுவையும் இதில் இருக்கிறது என்பதால்தான், சாண்ட்விச் சாப்பிட ஆர்வத்துடன் வருகின்றனர்.'' என்கிறார்.
விஜய் கற்றுத்தரும் சில ஸ்மார்ட் சாண்ட்விச் ரகங்கள் இங்கே...
 கிரில்டு வெஜ் சாண்ட்விச்
கிரீன் சட்னி (புதினா, கொத்தமல்லி, புளி, உப்பு சேர்த்து அரைத்தது) ஒரு பிரெட்டில் தடவி, இதில் குடைமிளகாய், தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை வட்டமாக வெட்டி வைக்கவும். அதன் மேல், சாட் மசாலா, கெச்சப், சில்லி ஃப்ளேக்ஸ் (காய்ந்த மிளகாய் விதைப் பவுடர்), கருப்பு உப்பு தூவி டோஸ்ட் செய்யவேண்டும்.  
 சில்லி சீஸ் டோஸ்ட்
ஒரு பிரெட் துண்டில் துருவிய சீஸ், மயாமிஸ், சாட் மசாலா, வட்டமாக நறுக்கிய 6 பச்சை மிளகாய்த் துண்டுகள்... இவற்றை வைத்து, மற்றொரு பிரெட் துண்டால் மூடி டோஸ்ட் செய்யவேண்டும்.
சாக்லெட் சாண்ட்விச்
நடலா சாக்லெட் பேஸ்டை ஒரு பிரெட் துண்டில் தடவி, சீஸ் துருவல், பாதாம் பவுடரையும் தூவவேண்டும். இதை டோஸ்ட் செய்து எடுத்ததும் சாக்லேட் சிரப் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறலாம். சாக்லேட் சீஸ் உருகும் என்பதால், உடனே சாப்பிட்டுவிடுவது நல்லது.
ஐஸ்க்ரீம் சாண்ட்விச்
வென்னிலா ஐஸ்க்ரீம் (அ) ஸ்ட்ராபெரி சேர்த்து அதன் மேல் சாக்லெட் சிரப் விட்டு, சாக்லெட் சிப்ஸ்களைத் தூவ வேண்டும். இதை கிரில்லில் வைத்து டோஸ்ட் செய்யவேண்டும்.
ஊட்டச் சத்து ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தியின் கருத்து:
 சான்ட்விச் செய்ய, கோதுமை பிரெட் பயன்படுத்துவதுதான் மிகவும் நல்லது.  இதில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கும்.  
  கேரட், வெள்ளரி, புதினா, தக்காளி போன்ற காய்கறிகள் சேர்ப்பதால் வைட்டமின் சி, பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், பீட்டாகரோட்டின், தாது உப்புக்கள் கிடைக்கிறது.  
  சீஸ், நட்ஸ் சேர்க்கும்போது புரதம், கொழுப்பு, எனர்ஜி, அதிக அளவு எசன்ஷியல் ஃபேட்டி மற்றும் அமினோ அசிட் கிடைக்கிறது.  நெடுநேரம் பசி எடுக்காமல் இருக்கும்.  சாக்லேட், ஐஸ்க்ரீம் சேர்ப்பது அதிக அளவு எனர்ஜி, ஆன்டி ஆக்சிடென்ட் கிடைக்கும்.  
 ஓடி விளையாடும் குழந்தைகளுக்கு சாண்ட்விச், நிஜமாகவெ ரிச் ஃபுட் தான். நோய்வாய்ப்பட்டவர்கள், உடலுக்குப் போதிய அசைவு இல்லாதவர்கள் சீஸ், நட்ஸ் வகைகளை தவிர்த்து, அதிக அளவு காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம். 

Related

சமையல் குறிப்புகள் 2878914527335843984

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item