கொங்கு நாட்டுச் சமையல்! சுருள் பணியாரம்
சுருள் பணியாரம் இந்த சுருள் பணியாரத்தில் சின்ன வெங்காம் சேர்த்து செய்வதே இதன் தனித்தன்மை. மிகவும் ருசியானதும் கூட. ஒரு முறை செஞ்சு பாருங்க....
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2072.html
சுருள் பணியாரம்
இந்த சுருள் பணியாரத்தில் சின்ன வெங்காம் சேர்த்து செய்வதே
இதன் தனித்தன்மை. மிகவும் ருசியானதும் கூட. ஒரு முறை செஞ்சு பாருங்க.
கண்டிப்பாக உங்கள் குடும்பத்தாரின் படு பேவரிட் டிஷ் ஆகிவிடும்.
தேவையான பொருள்கள்:
அரிசி மாவு கால் கிலோ
ஆட்டா மாவு 100 கிராம்
சின்ன வெங்காயம் 1 கப்
மஞ்சள் தூள் 5 கிராம்
நெய் 150 கிராம்
எண்ணெய் கால் லிட்டர்
ஏலக்காய் 5 கிராம்
செய்முறை :
அரிசி மாவை நிறம் மாறாமல் சிறிது வறுத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயம், மஞ்சள்தூள், நெய் சேர்த்து வதக்கவும்,
பிறகு மைய அரைத்துக் கொள்ளவும். பின்னர் அந்த அரைத்த கலவையில்
வறுத்த அரிசி மாவையும், பொடியாக்கிய சர்க்கரை, ஏலக்காயை
சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதனுடன் சிறிது ஆட்டா மாவு சேர்த்து சப்பாத்தி மாவு போல்
பிசைந்து வைக்கவும்.
பிறகு சமமான உருண்டைகளாக உருட்டி வைத்து
சீராக தேய்த்து கொள்ளவும். தேய்த்த மாவை சுருளாக சுருட்டி,
சிறிதாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை
எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுருள் பணியாரம் தயார்.
Post a Comment