ஷாப்பிங் போகலாமா..? கிரைண்டர்... வாங்கும் முன், பின் கவனிக்க!
ஷாப்பிங் போகலாமா..? கிரைண்டர்... வாங்கும் முன், பின் கவனிக்க! ஒ வ்வொரு பொருளையும் வாங்குவதற்கு முன் ...
கிரைண்டர் வைக்க கிச்சனில் மேடை வசதியில்லை எனில், சந்தையில் கிடைக்கும் அதற்கென்ற பிரத்யேக ஸ்டாண்டுகள் வாங்கிப் பயன்படுத்தலாம்; கையாள்வது சுலபமாக இருக்கும்.
கிரைண்டருடன் கோதுமை மாவு பிசைய, தேங்காய் துருவ எல்லாம் தரப்படும் அட்டாச்மென்ட்களும் வேண்டுபவர்கள், அந்த மாடலை தேர்வு செய்து வாங்கவும்.
டிரம்மை தனியாக வெளியே எடுக்கும் வகையிலான டேபிள் டாப் கிரைண்டரில், டிரம் வைக்கும் ஸ்டாண்டில் புஷ் சரியாக இருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் செக் செய்துகொள்ளவும்.
கிரைண்டருக்கென குறிப்பிடப்பட்டுள்ள கொள்ளளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக தானியங்கள் போட்டு அரைத்தால், தேய்மானம் ஏற்படும்.
எப்போதும் கிரைண்டரில் உளுந்து அரைத்த பின்னரே அரிசியை அரைக்கவும். அப்போதுதான் வழவழப்பு நீங்கி சுத்தம் செய்ய எளிதாக இருக்கும்.
டேபிள் டாப் கிரைண்டரின் குழவிக்கல் தேய்ந்துவிட்டால் மாவு அரைக்க நேரமாகும் என்பதால், புதிதாக கற்களை மாற்றிக்கொள்ளவும்.
கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை லூஸாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது என்பதால், இறுக்கமாக மாட்டப்பட்டிருக்கிறதா என்று அடிக்கடி செக் செய்துகொள்ளவும்.
கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டை உலர்ந்த துணியால் துடைத்துவிட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.
மாவு தள்ளும் பலகை டிரம்மில் படாதபடியும், கல்லில் படாதபடியும் சிறிது இடைவெளி விட்டு இருந்தால் பலகை விரைவில் தேய்வதைத் தவிர்க்கலாம்.
ஒவ்வொரு முறை கிரைண்டர் குழவிக் கல்லை கழுவும்போதும் அதன் கைப்பிடியில் உள்ள வாஷரின் உள்ளே தண்ணீர் சென்றுவிடாதபடி கழுவ வேண்டியது அவசியம்.
கிரைண்டர் ஆட்டும்போது சத்தம் அதிகம் வந்தால், பேரிங் பழுதடைந்திருக்கும். உடனடியாக பேரிங்கை மாற்றவும்.
கிரைண்டரில் உள்ள பாலிஷ் மங்காமல் இருக்க சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய் கொண்டு துணியால் துடைக்கலாம்.
கிரைண்டருக்கும் சுவருக்கும் சிறிதளவு இடைவெளி இருக்க வேண்டும். அந்த அறையில் எர்த் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும்.
கிரைண்டர் பயன்பாட்டில் இருக்கும்போது, அதிக மின்சாரம் இழுக்கக்கூடிய மற்ற மின்சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.’’
Post a Comment