பல வகையான இனிப்புப் பண்டங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட்ட வயிற்றுக்கு இதமளிக்கும் எளிய மருத்துவங்கள் இங்கே...!
ப ல வகையான இனிப்புப் பண்டங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட்ட வயிற்றுக்கு இதமளிக்கும் எளிய மருத்துவங்கள் இங்கே... நெஞ்சு எரிச்...
நெஞ்சு எரிச்சலுக்கு...
சீரகம், தனியா, பெருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து, நீரில் கொதிக்கவிட்டு, கருப்பட்டி சேர்த்து அருந்தலாம்.
புதினா இலைகள், சீரகம், இந்து உப்பு போட்டு, தண்ணீரைக் கொதிக்கவிட்டு குடித்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கிவிடும்.
சுண்டை வற்றல் - 1 கைப்பிடி, சிறிதளவு கறிவேப்பிலை, ஓமம் - 1 டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன் ஆகியவற்றை வறுத்துப் பொடியாக்கி, உப்பு சேர்த்து, மோருடன் குடித்தால், அசௌகரிய உணர்வு நீங்கும். வயிற்றுப்போக்கும் நிற்கும்.
வாயுத் தொல்லைக்கு...
மிளகு, சீரகம், சுக்கு, ஓமம், கருஞ்சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை வெந்நீரில் கொதிக்கவிட்டு இந்துப்பு கலந்து அருந்தலாம்.
Post a Comment