ரூ.6,500க்கு விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்!
ரூ.6,500க்கு விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்! க ம்ப்யூட்டர் சந்தையை உற்று நோக்கினால் அதன் வளர்ச்சியை கண் ...
அந்த வகையில் அமெரிக்க நிறுவனமான இன்ஃபோகஸ் நிறுவனம், கங்காரு எனும் புதிய வகை கணினியை அறிமுகம் செய்துள்ளது.
* உலகின் சிறிய கணினி என்ற பெருமையை பெற்றிருக்கும் இந்த கணினி 124 mm நீளம், 80.5 mm அகலமும், 12.9 mm சுற்றளவும் கொண்டிருக்கின்றது.
* இந்த கணினியில் கழற்றக் கூடிய ஒரே பேஸ் யூனிட், எச்.டி.எம்.ஐ போர்ட், யு.எஸ்.பி-2.0 போர்ட், யு.எஸ்.பி-3.0 போர்ட், டி.சி பவர் போர்ட் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த எடை 200 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.
* இதில் விண்டோஸ் ஹெல்லோவுக்கு கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
* 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியோடு கூடுதலாக 128 ஜிபி வரை மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
* நான்கு மணி நேரம் வரை பேக்கப் வழங்கும் பேட்டரியும், சார்ஜ் செய்ய மைக்ரோ-யு.எஸ்.பி போர்ட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
* கங்காரு கணினி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய விண்டோஸ் 10 இயங்குதளத்தை கொண்டிருக்கின்றது.
* இந்தியாவில் கங்காரு கணினியின் விலை ரூ.6,500 ஆகும்.
* நவம்பர் மாதத்தின் மத்தியில் மைக்ரோசாப்ட் ஸ்டோர் மூலம் கங்காரு கணினி விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
* இந்த கணினியை கொண்டு இண்டர்நெட் ப்ரவுசிங், வீடியோ கேம், மற்றும் ஃபுல்-எச்.டி வீடியோ உள்ளிட்டவைகளை பயன்படுத்த முடியும்.
Post a Comment