நோய் எதிர்ப்பு சக்திக்கு 4 ஸ்டார் மிக்ஸ்டு ஜூஸ்!
நோய் எதிர்ப்பு சக்திக்கு 4 ஸ்டார் மிக்ஸ்டு ஜூஸ் தேவையானவை: ஆப்பிள் - 2, பேரிக்காய் - 2, கேரட் (நடுத்தர சைஸ்) - 1,...
செய்முறை: ஆப்பிள், பேரிக்காய், கேரட் ஆகியவற்றை தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். புதினா இலைகளை உதிர்த்து, நறுக்கிய துண்டுகளோடு சேர்த்து, தேன், தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து, வடிகட்டி, அருந்த வேண்டும்.
வைட்டமின் ஏ, சி நிறைவாக உள்ளதால், கண்களுக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கலோரி நிறைந்தது. எனவே, இந்த ஜூஸை ஓர் உணவு வேளைக்கும், மற்றோர் உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் குடித்துவந்தால், உணவு அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்க முடியும்.
இதில் உள்ள நுண்ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு வலு சேர்க்கும். எனவே, பள்ளி்க்குச் செல்லும் குழந்தைகளுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது.
உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் இருப்பவர்கள் இந்த ஜூஸைக் குடிப்பது நல்லது.
அல்சைமர், பார்கின்சன் நோய் போன்றவற்றைத் தடுக்கும் ஆற்றல் ஆப்பிளுக்கு உண்டு. கேரட், ஆப்பிள், பேரிக்காய் கெட்ட கொழுப்பைக் குறைக்கும். எனவே, உடல் பருமனாக இருப்பவர்கள், தேன் சிறிதளவு மட்டும் சேர்த்து அருந்தலாம்.
இரிட்டபி்ள் பவுல் சிண்ட்ரோம் பிரச்னை, மலச்சிக்கல், பித்தப்பை கற்கள், போன்றவற்றைத் தடுக்கும் ஆற்றல் ஆப்பிள், பேரிக்காய்க்கு உண்டு.
மன அழுத்தம் இருப்பவர்கள் இந்த ஜூஸ் குடிக்கலாம், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பதால் தேகம் பொலிவு பெறும்.
2 comments
பயனுள்ள தகவல் தங்கள் பகிர்வுக்கு நன்றி .........
Joshva
Thanks for your comment By pettagum A.S. Mohamed Ali
Post a Comment