உறுதியான உடம்புக்கு விரதமே மருந்து! பாட்டி வைத்தியம்!!
பாட்டி வைத்தியம் உறுதியான ...
https://pettagum.blogspot.com/2015/10/blog-post_85.html
பாட்டி வைத்தியம்
உறுதியான
உடம்புக்கு விரதமே
மருந்து!
இ ந்தக் காலத்துல குழந்தைங்கள்லருந்து
பெரியவங்க வரை அத்தனை பேருக்குமே கன்னாபின்னா உணவுதான் (ஸ்டைலா
ஃபாஸ்ட் ஃபுட்னு சொல்லிக்கறாங்க) பிடிக்கிறது. இப்படி சாப்பிட்டா,
உடம்பு என்னாகிறது?!
மாசம் ஒரு தடவையாவது உண்ணாவிரதம் இருந்து, ஜலபானமா குடிச்சா,
உடம்பு கிளியராகும். இப்பவும் நானெல்லாம் ஏகாதசி விரதம் இருந்து,
அடுத்த நாள் துவாதசி அன்னிக்கு பத்திய சாப்பாடு சாப்பிடறதால தான்,
என் உடம்பு கிண்ணுனு இருக்கறதா நினைக்கிறேன்.
என் இருபதாவது வயசுலருந்து ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கிறேன். மறுநாள்
பார்த்தீங்கனா உடம்பு அப்பிடியே புத்துணர்வா இருக்கும். முழு பட்டினி இருக்க
முடியாதவங்க, பகல் ஒருவேளை மட்டும் லைட் டிபனா சாப்பிட்டு, ராத்திரி
ஒரு டம்ளர் பால் மட்டும் குடிக்கலாம். நடுவுல தண்ணி, இளநீர் தவிர வேற
எதுவும் சாப்பிடக் கூடாது. அந்தக் காலத்துல குதிரை, பசுனு வீட்டுல வளக்கற
விலங்கு களுக்குக்கூட ஏகாதசி தினத்தன்னிக்கு தீனி போட மாட்டாங்களாம்.
அதுகளும் விரதம் அனுசரிக்கு மாம்.
சரி... ஏகாதசி விரதம் இருந்தாச்சு! அடுத்த நாள் என்ன சாப்பிடலாம்?
உடனே வளைச்சுக் கட்டி, பீட்ஸா, பிரியாணினு இறங்கக் கூடாது. வேலையில்லாம
இருந்த ஜீரண உறுப்புகளுக்கு உடனே ஓவர்டைம் வேலை கொடுத்தா, விரதம்
இருந்ததுக்கே பலன் இல்லை! கதை கந்தல்தான்!
அதனால, துவாதசி அன்னிக்கு அகத்திக் கீரை கூட்டு, நெல்லிக்காய் தயிர்
பச்சடி, மிளகு - சீரக ரசம்னு சிம்ப்பிளா சாப்பிடணும். அகத்திக் கீரை
வயித்தை ‘ஆத்தி’ சரிபண்ணும் கிறதாலதான் அதுக்கு அந்தப் பேரு! அதேபோல
நெல்லிக்காய் - தயிர் பச்சடி வயித்தைக் குளுமை பண்ணி, முதல்நாள் பட்டினிச்
சூடு ஏற்பட்டதை சரிப்படுத்தும். அதுல இரும்புச் சத்தும் நிறைய இருக்கறதால,
ரத்தத்தை ஊற வச்சு தெம்பு கொடுக்கும்.
வயசானவ சொல்றேன்... ‘பாட்டி சொல்லை தட்டாம’ கேளுங்க.
15 நாளுக்கு ஒருவாட்டி வர்ற ஏகாதசி விரதத்தை கடைப்பிடியுங்க. உடம்பு,
கோட்டை மாதிரி உறுதியாகும்.
|
|
|
- இன்னும் சொல்றேன்...
Post a Comment