பித்தக் கோளாறுகள் அத்தனையும் குணமாக தினம் ஒரு விளாம்பழம்! பாட்டி வைத்தியம்!!

தினம் ஒரு விளாம்பழம்னு 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, ப...

தினம் ஒரு விளாம்பழம்னு 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தா,
பித்தக் கோளாறுகள் அத்தனையும் குணமாகறதோட,
உடம்புல புதுரத்தம் ஊத்தெடுக்கும்!
ந்தக் காலத்து குழந்தைங்க பூஸ்ட், போர்ன்விட்டானு குடிச்சு வளர்ந்தாலும், எப்போ வேலைக்குப் போக ஆரம்பிக் கறாங்களோ... அப்பவே அடிக் கொருதரம் காபி, டீ குடிக்கற பழக்கம் ஆரம்பிச்சுடுது! விளைவு - சின்ன வயசுலயே பித்தம் தலைக்கேறி தலை நரைச்சுடுது.
பித்தம் ஜாஸ்தியானா, வாய் கசந்து சாப்பாடு பிடிக்காம போயிடும். உடம்புக்குத் தேவையான ஊட்டம் இல்லேன்னா, சலிப்பு மனப்பான்மை தானாவே வந்துடும்.
இதுக்கு அருமையான ஒரு மருந்து என்ன தெரியுமா? தினம் ஒரு விளாம்பழத்தை பச்சடி பண்ணி சாப்பிடறதுதான்!
விளாம்பழ சதைப் பகுதியில, வெல்லம் போட்டு பிசைஞ்சு, கொஞ்சமா தண்ணி விட்டு அடுப்புல வச்சு, ஜாம் மாதிரி ஆனதும் இறக்கிடுங்க. விருப்பப்பட்டா, ஒரு காய்ஞ்ச மிளகாயை தாளிச்சுக் கொட்டலாம். அவ்வளவுதான், விளாம்பழ பச்சடி ரெடி! இனிப்பும் புளிப்புமா வாய்க்கு அவ்ளோ ருசியா இருக்கும்.
பித்த சம்பந்தமான எல்லா வியாதியையும் குணப்படுத்தற மருத்துவத் தன்மை விளாம்பழத்துல இருக்கு! தினம் ஒரு பழம்னு 21 நாள் தொடர்ந்து இதைச் சாப்பிட்டா, பித்தக் கோளாறுகள் அத்தனையும் குணமாகறதோட, உடம்புல புது ரத்தம் ஊத்தெடுக்கும்.
ளர்ற குழந்தைகளுக்கும் விளாம்பழம் ரொம்ப நல்லது. அப்பப்போ விளாம்பழத்தை அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ரெடி பண்ணிக் கொடுத்து, சாப்பிட வச்சா, உறுதியான எலும்புகள் அமையும்.. ஞாபக சக்தி அபாரமா இருக்கும்.. நோய்களும் சட்டுனு தாக்காது! வயசானவங்களுக்கு விளாம்பழ பச்சடியை சாப்பிடக் குடுங்க. அது ஒரு டானிக் மாதிரி செயல்படுறதால, அவங்க புதுத் தெம்போட உலா வருவாங்க. பற்கள் பலப்படும்.
அடை, தோசைக்குத் தொட்டுக் கிட்டு சாப்பிட, விளாம்பழ பச்சடி ஜோரான ஜோடி. செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க.
- இன்னும் சொல்றேன்...

Related

பாட்டி வைத்தியம் 3430158924016201413

Post a Comment

2 comments

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...
பகிர்வுக்கு நன்றி.

MohamedAli said...

நண்பர் பரிவை சே.குமார் அவர்களின் வருகைக்கு வாழ்த்துக்கள்! நன்றி! பெட்டகம் A.S. முஹம்மது அலி

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item