தாய்ப்பால் அதிகமாக சுரக்க... !
தாய்ப்பால் அதிகமாக சுரக்க... விவரங்கள் எழுத்தாளர்: மாற்று மருத்துவம் தாய்ப் பிரிவு: மருத்துவம் பிரிவு: குழந்தை நலம் ...
https://pettagum.blogspot.com/2015/10/blog-post_13.html
தாய்ப்பால் அதிகமாக சுரக்க...
- விவரங்கள்
- எழுத்தாளர்: மாற்று மருத்துவம்
- தாய்ப் பிரிவு: மருத்துவம்
- பிரிவு: குழந்தை நலம்
- கல்யாண முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகரிக்கும். பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் சுரக்கும். ஆலம் விழுதின் துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம் காலையில் மட்டும் பாலில் கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.
- அமுக்கிராங்கிழங்கு இலையினை கஷாயம் காய்ச்சி பருகினால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
- 1 கிராம் அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்ப்பால் பெருகும். வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்.
- முருங்கை கீரையை சாப்பிட்டுவர தாய்ப்பால் அதிகரிக்கும். தக்காளி இலைகளை காடியில் அரைத்து மார்பில் கட்டிவர தாய்ப்பால் பெருகும். அருகம்புல் சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும். இளம் இலைகளைச் சமைத்து உண்ண தாய்ப்பால் சுரக்கும். அகத்தி இலையைச் சமைத்து உண்டு வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
- அம்மான் பச்சரிசி இலையை அரைத்துப் பாலில் கலந்து குடித்துவர தாய்ப்பால் அதிகரிக்கும். குழந்தைப் பிறப்பதற்கு முன்பும் பின்பும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
- சிறிதளவு கேழ்வரகு மாவு, எள்ளு ஒன்றாக சேர்த்து இடித்து அடை செய்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் பின்பு தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு வேண்டிய தாய்ப்பால் சுரக்கும்.
- சிறிதளவு அம்மான் பச்சரிசி கீரையின் பூக்களை 1 கப் எடுத்து சுத்தம் செய்து நன்றாக மைய அரைத்து பாலுடன் கலந்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
- முருங்கைகீரை பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். இளம் பிஞ்சான நூல்கோலை சமைத்து உணவுடன் உண்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். ஒரிதழ் தாமரை இலையை அரைத்து சிறிதளவு மோரில் கலந்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும்.
- அரைக்கீரை சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதேஅளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்.
Post a Comment