ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! -2

- அனந்த சாய் ‘‘எ க்ஸ்க்யூஸ் ...

- அனந்த சாய்
‘‘எ க்ஸ்க்யூஸ் மீ...’’ - கோரஸாக ஒலித்த குரலைக் கேட்டு, வாசலைப் பார்த்தார் உஷா மேம். அங்கே நின்றிருந்தவர்கள் நம்ம வித்யாவும், கோமதியும்தான்!
முகத்தில் புன்னகையை தவழவிட்ட உஷா மேம், ‘‘யூ ஆர் வெல்கம்!’’ என்றார்.
‘‘என்ன, நான் கொடுத்திருந்த ஹோம் வொர்க்கை பண்ணீங்களா?’’ என்று உஷா மேம் லெக்சரர் தோரணையிலேயே கேட்க, ‘‘யெஸ் மேம்!’’ என்றாள் வித்யா. கோமதி ஒருபடி மேலே போய், தன் செல்லக்குட்டி ஷிவானியின் புத்தகத்தில் இருந்த ரைம்களை மனப் பாடமாக ஒப்பிக்கவே ஆரம்பித்தாள். பரபரப்பான வித்யாவும், tongue twisters வாக்கியங்களைச் சொல்லிக் காட்டினாள்.
‘‘வெரிகுட்!’’ என்ற உஷா மேம், வித்யா பக்கம் திரும்பி, ‘‘உனக்கு கொஞ்சம் advanced ஆகவும், கோமுவுக்கு fundamentals -ம் சொல்லித் தரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். இப்ப நீ என்ன பண்றே, உங்க லைப்ரரி மேம் கிட்ட இங்கிலீஷ்ல எப்படி பேசுவேனு சில வாக்கியங்கள் எழுது. கோமதி, போனதடவை நான் சொல்லித் தந்த auxiliary verbs -ஐ திருப்பித் திருப்பி படிச்சு மனசுல ஏத்திக்க. ரெண்டு பேருக் கும் பத்து நிமிஷம் தர்றேன்!’’ என்றார்.
பத்து நிமிடம் கழித்து வித்யா, ‘‘லைப்ரரி மேம்கிட்ட பேசற மாதிரி எழுதியிருக்கேன். Here it is !’’ என்றாள். அதை வாங்கிய உஷா மேம், ‘‘வித்யா! நீ ‘இந்தாங்க’ என்கிற அர்த்தத்துல Here it is -னு சொன்னே இல்லியா, அதை Here you are -னு கூட சொல்லலாம். இது இன்னும் பணிவா இருக்கும். வெள்ளைக்காரங்க இப்படித்தான் பேசுவாங்க’’ என்றபடி தொடர்ந்தார்...
‘‘உரையாடல் என்கிறது வெறும் கேள்வி-பதில் மட்டு மில்லை. அது நல்லுறவுகளை வளர்க்கும் சாதனம். அமைச்சர்கிட்ட ஒரு அதிகாரி, ‘நீங்க என்ன நினைக் கிறீங்க’னு நேரடியா கேட்டுடக் கூடாது. What do you think ?-ன்னா அவருக்கு ஒரு மாதிரி இருக்கும். ‘இதைப் பத்தி உங்க கருத்து என்னனு தெரிஞ்சிக்க விரும்பறேன்’னு பேசற அதிகாரியைத்தான் அமைச்சருக்குப் பிடிக்கும்!’’
வித்யா கேட்டாள், ‘‘அப்படீன்னா, ‘ I want to know your views on this ’-னு சொல்லலாமா, மேம்?’’
‘‘வித்யா! நீ சொன்னதையே இன்னும்கூட பவ்யமா சொல்லலாம். want -க்கு பதிலா அதோட past tense ஆன wanted போட்டு ‘I wanted to know’ -னு சொல்றது நல்லது. அதேமாதிரி, நீணீஸீ உபயோகப்படுத்தற இடத்துல could போட்டா ரொம்ப பணிவாயிடும்!’’
உடனே, வித்யா தான் எழுதியிருந்ததை எடுத்து ஏதோ அடிக்க ஆரம்பித்தாள்.
‘‘எதை திருத்தறே வித்யா?’’
‘‘லைப்ரரி மேம்கிட்ட ‘ நீணீஸீ you give me the book register ?’னு கேக்கிற மாதிரி எழுதியிருந்தேன். அந்த நீணீஸீ -ஐ could -னு மாத்தினேன், மேம்’’.
‘‘பேசறப்ப could you please -னு சொல்லு. அது இன்னும் பெட்டர்!’’
உஷா மேம் சொல்வதை கவனித்துக் கொண்டிருந்த கோமதி, ‘‘ could -ங்கிற இந்த மாடல் verb -க்கு அவ்வளவு அர்த்தம் இருக்கா, ஆன்ட்டி?’’ என்று கேட்டாள்.
‘‘கோமு! நீ உச்சரிக்கறப்ப ‘மாடல்’னு சொல்ற. அது மாடல் இல்லை. மோடல் ( Modal )! Mood -ங்கற வார்த்தையிலிருந்து அது வந்தது.’’
‘‘ ‘மூட்’னா ஃபீலிங்தானே?’’
‘‘ஆமா! அந்த வார்த்தைகள் நம்மோட உணர்வுகளை வெளிப்படுத்தும். பேசறப்ப ஒரு கவனம் எடுத்துக்கிட்டு பேசினா modal verb அர்த்தம் சரியா வரும்.’’

‘‘எனக்குக் கூட இது பத்தி தெரியல மேம்!’’ என்றாள் வித்யா.
‘‘ Modals பத்தி தெரிஞ்சிக்கணும்னா தன்மை ( first person ), முன்னிலை ( second person ), படர்க்கை ( third person ) பத்தி தெரிஞ்சிக்கணும். shall வந்து first person -க்கு மட்டும்தான் வரும். will வந்து second person, third person -க்கு வரும். அதை மாத்திப் போடறதுலதான் இங்கிலீஷோட சூட்சுமமே அடங்கியிருக்கு!’’
‘‘ஆன்ட்டி! எப்படினு விளக்குங்களேன்!’’ ‘‘கோமு! நீ புதுசா வீடு கட்டிட்டு இருக்கே. அப்புறம், கிரஹப்பிரவேசம் எப்ப பண்றதா திட்டம்?’’
‘‘எங்க ஆன்ட்டி, லோன் வாங்கிட்டு என் வீட்டுக்காரர் கொஞ்சம் திணர்றார். ‘டெப்ட்’ ரொம்ப ஆயிடுச்சு!’’
உஷா மேம் சிரித்தார். ‘‘உன் உச்சரிப்பைத் திருத்தவே நான் ஒரு அவதாரம் எடுக்கணும்! அது டெப்ட் இல்ல, கோமு. det. இந்த debt -ல தீ-க்கு சவுண்ட் இல்லை. சைலண்ட்.’’
‘‘மோடலை மாத்திப் போடறதைப் பத்தி...’’ என்று நினைவூட்டினாள் வித்யா.
‘‘ஓகே. கிரஹப்பிரவேசத்துக்கு இன்விடேஷன் அடிப்ப இல்லியா, கோமு? அப்ப என்னைக் கூப்பிடறப்ப என்னனு கூப்பிடுவே?’’
‘‘கட்டாயமா வரணும்னு கூப் பிடுவேன். you must come -னு.’’
‘‘ you shall come -னு கூட கூப்பிடலாம். பதிலுக்கு நான் I shall come -னு சொன்னா அது நார்மல். வர்றதைப் பத்தி இன்னும் யோசிக்கலைனு அர்த்தம். ஆனா, shall -க்கு பதிலா will போட்டு, I will come -னு சொன்னா ‘கட்டாயமா வர்றேன்’னு அர்த்தம்! அதாவது, first person ஆன I -க்கு போடவேண்டிய shall -க்கு பதிலா, second மற்றும் third person -க்கு போடவேண்டிய will- ஐ போட்டா, அதுக்கு அர்த்தமே மாறிடும்!’’
‘‘மேம்! auxiliary -னு ஏன் அதைச் சொல்றாங்க?’’ என்று கேட்டாள் வித்யா.
‘‘ auxiliary -ன்னா துணை செய்யறதுனு அர்த்தம். அந்த verb -க்கு தனிப்பட்ட அர்த்தம் எதுவும் கிடையாது. இடத்துக்கு இடம் அர்த்தம் மாறும். ஆனா, அது இல்லாம நாம பேசவும் எழுதவும் முடியாது!’’
‘‘மோடல் வெர்ப்ல இருக்கற may, might பத்தி கொஞ்சம் சொல்றீங்களா, ஆன்ட்டி?’’ - இது கோமதி.
‘‘ may, might -ன்னா ‘ஒருவேளை’ங்கற அர்த்தத்துல வரும். அதேநேரம், பெர்மிஷன் கேக்கறதுக்கும் பொத்தாம் பொதுவா பேசறதுக்கும் உதவும். உதாரணத்துக்கு, where is Gomathi -னா she might be at home -னு சொல்லலாம்.’’
‘‘ she might be watching TV -ன்னு சொல்லலாமா?’’ என்று வித்யா ஓரக்கண்ணால் பார்க்க, ‘‘ஏய்!’’ என்று புத்தகத்தால் அடிப்பது போல பாசாங்கு செய்தாள் கோமதி.
‘‘ஒண்ணு தெரியுமா, வித்யா! நம்ம தமிழ்நாட்டுல 40 வருஷங்களுக்கு முன்னாடி may -ங்கிற அந்த மோடல் வெர்ப் பல உயிர்களைப் பலி வாங்கியிருக்கு! அதைப் பத்தி அடுத்த க்ளாஸ்ல சொல்றேன்’’ என்ற உஷா மேம், ‘‘கோமு, உன்னை wh-question word -ஐ வச்சு கேள்வி கேக்க சொல்லியிருந்தேன். மறந்துட்டியா? அடுத்த க்ளாஸ்ல அதைக் கண்டிப்பா சொல்லணும்’’ என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி, விடை கொடுத்தார்.
- கத்துக்கலாம்
   

Related

ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! 750544376215759644

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item