சிசுக்களை அழவைக்கும் டயப்பர் டார்ச்சர்!
சிசுக்களை அழவைக்கும் டயப்பர் டார்ச்சர்! தா ரிணிக்குக் குழந்தை பி...

மலத்தில் இருந்த கிருமிகள் சருமத்தில் எப்படிப் பாதிப்பை ஏற்படுத்தின?
குழந்தையை மெத்தையில் படுக்கவைக்கும்போது சிறுநீர், மலம் கழித்தால் மெத்தை வீணாகிவிடும்
குழந்தையுடன் வெளியில் கிளம்பும்போது அணிவிக்கும் டயப்பரை, மறுபடியும் வீட்டுக்குத் திரும்பி வரும்வரை பல அம்மாக்கள் அகற்றுவதில்லை. குழந்தை சிறுநீர் கழித்தாலும், 'டயப்பர்தான் ஈரத்தை உறிஞ்சிவிடுமே’ என்று அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். வேறு சில அம்மாக்களோ குழந்தையை இரவு தூங்கவைக்கும்போது அணிவிக்கும் டயப்பரை, காலையில்தான் கழட்டுகிறார்கள். டயப்பரைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து அலசுகிறார்கள் குழந்தை நல மருத்துவர் ராமச்சந்திரனும் தோல் சிகிச்சை நிபுணர் ஜானகியும்.
'நம்மூரில் வீட்டில் இருக்கும் பழைய துணியைக் கிழித்துக் கோவணம் கட்டுவார்களே... அதுதான் டயப்பருக்கான ஆரம்பம். வெளிநாட்டினர் அதில் சில மாற்றங்களைச் செய்து தற்காலத்துக்கு ஏற்றபடி நாகரிகமாக டயப்பர், நாப்கின் என்று விளம்பரப்படுத்தி விற்றுவருகின்றனர். உண்மையில் நம்முடைய கோவணம் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உடை. காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை. மறுபடியும் துவைத்துப் பயன்படுத்தலாம். காற்றோட்டமாக இருக்கும். குழந்தை சிறுநீரோ, மலமோ கழித்தால் வெளியில் தெரியும். உடனே மாற்ற முடியும். ஆனால், வெளியில் குழந்தைகளைத் தூக்கிச் செல்லும்போது அடிக்கடி துணி மாற்றும் நிர்பந்தம் ஏற்படுவது கோவணம் ஏற்படுத்தும் அசவுகரியம். இதன் காரணமாகவே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஈரத்தை உறிஞ்சக்கூடிய வகையிலான டயப்பர் வந்தது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை சற்றுக் குறைவாக இருக்கும். காரணம், தாய்ப்பாலில் அதிக அமிலத்தன்மை இருக்கிறது. இதனால், பாக்டீரியாவும் வியர்வையும் சேர்வதால் உண்டாகும் காரத்தன் மையை இது சமப்படுத்தும். ஆனால், புட்டிப்பாலில் அமிலத்தன்மை குறைவாக இருப்பதால், அதைப் பருகும் குழந்தைகளுக்கு டயப்பர் தொடர்பான பிரச்னைகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
டயப்பரிலேயே குழந்தை சிறுநீர், மலம் கழித்தால் வெளியில் தெரியாது. எனவே, குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை டயப்பரைக் கழற்றி சிறுநீர், மலம் கழித்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். குழந்தை முகம் சுளித்தாலோ, மலம் கழித்த வாடை தெரிந்தாலோ டயப்பரைக் கழற்றிப் பார்க்க வேண்டும். ஒருவேளை மலம், சிறுநீர் கழித்திருந்தால் டயப்பரைக் கழற்றி அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு ஈரம் போக நன்றாகத் துடைத்துவிட்டு புதிய டயப்பர் அணிவிக்கலாம்.
குழந்தை மலம், சிறுநீர் கழிக்காவிட்டால் எவ்வளவு நேரம் டயப்பரைப் பயன்படுத்தலாம் என்ற கேள்வி இப்போது எழலாம். ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் மட்டுமே டயப்பரைப் பயன்படுத்தலாம். அதுவும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஐந்து நிமிடங்கள் டயப்பரைக் கழற்றி, காற்றோட்டமாக இருக்கும்படி விட்டுவிட வேண்டும். வியர்வை இருந்தால் நன்றாகத் துடைத்துவிட்டு மறுபடியும் அணிவிக்கலாம்.
டயப்பர்களைப் பொருத்தவரை, தரமானதாகப் பார்த்து வாங்க வேண்டும். தற்போது சூப்பர் அப்சர்வ் காட்டன் டயப்பர்கள் கிடைக்கின்றன. இவை ஈரத்தை நன்றாக உறிஞ்சும். மிருதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வகை டயப்பர்களில் 'எமோலியன்ட்’ (Emollient) என்கிற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதனால் எரிச்சல் இருக்காது.
டயப்பர் அணிவிக்கும் உடல் பாகத்தில், ஈரம் இல்லாமல் துடைத்து உலர்வாக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம்!'
Post a Comment