ஆடு, மாடுகள் இவற்றுக்குக் காப்பீடு செய்ய !
‘‘எங்கள் பண்ணையில் ஆடு, மாடுகள் உள்ளன. இவற்றுக்குக் காப்பீடு செய்ய விரும்புகிறோம். இதன் விவரங்களைச் சொல்லவும்?’’ கே.சந்திரன், வாடிப்பட்ட...
https://pettagum.blogspot.com/2015/10/blog-post_2.html
‘‘எங்கள் பண்ணையில் ஆடு, மாடுகள் உள்ளன. இவற்றுக்குக் காப்பீடு செய்ய விரும்புகிறோம். இதன் விவரங்களைச் சொல்லவும்?’’
‘‘வழக்கமாக விவசாயக் கடன், பண்ணைக் கடன் போன்றவற்றை வழங்கும்போது, வங்கிகளே காப்பீடு செய்து தருவது கட்டாயமாகக் கடைபிடிக்கப்படுகிறது. மற்றபடி விருப்பம் உள்ளவர்கள் தங்களது கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய எந்தத் தடையும் இல்லை. இதற்காக வங்கிகளில் கடன் பெற்றிருக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை.
ஆடுகளைப் பொறுத்தவரை, நான்கு மாத குட்டி தொடங்கி, ஏழு வயது கொண்ட பெரிய ஆடுகள் வரை காப்பீடு செய்யலாம். இதேதான் மாடுகளுக்கும் பொருந்தும். சம்பந்தபட்ட கால்நடை நலமுடன் இருக்கின்றது என்று அந்தப் பகுதி கால்நடை மருத்துவரிடம் சான்று வாங்கித் தரவேண்டும் என்பது முக்கியம். ஓர் ஆண்டுக்குக் காப்பீட்டுத் தொகை ஆடு, அல்லது மாட்டின் விலையில் 4% என்ற அளவில் வசூலிக்கப்படுகிறது. அதாவது, ஆட்டின் விலை ஆயிரம் ரூபாய் என்றால், ரூ.40 காப்பீட்டுத் தொகையாக செலுத்த வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
காப்பீடு செய்யப்பட்ட ஆடு, மாடுகள் காதில் பிளாஸ்டிக் தோடு போடப்படும்.
இதில், சம்பந்தபட்ட ஆடு, மாடுகளைப் பற்றிய விவரங்கள் இருக்கும். ஒரு
கால்நடைக்குக் காப்பீடு செய்யப்பட்டுவிட்டால், அந்த நிமிடத்திலிருந்தே
விபத்து தொடர்பான மரணத்துக்கு இழப்பீடு கிடைக்கும். ஆனால்,
எதிர்பாராதவிதமாக நோய்வாய்ப்பட்டு இறக்கும்பட்சத்தில், காப்பீடு
செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கவேண்டும். அன்றைய தேதியில்
சந்தை விலை எவ்வளவு என்பதை கணக்கில் கொண்டு இழப்பீட்டுத் தொகை
வழங்கப்படும். விவசாயி விருப்பப்பட்டால், மூன்று ஆண்டுகளுக்குக்கூட ஒரே
நேரத்தில் காப்பீடு செய்யலாம். 50, 100 எண்ணிக்கையில் கால்நடைகளை
மொத்தமாகக் காப்பீடு செய்தால், பிரீமியத்தில் தள்ளுபடியும் உண்டு. திருடு
போன கால்நடைகளுக்கு இழப்பீடு கிடைக்காது.
தொடர்புக்கு, வாடிக்கையாளர் சேவை மற்றும் குறைதீர்க்கும் பிரிவு,
ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் மண்டல அலுவலகம், 4-எஸ்பிளனேட், சென்னை- 108.
செல்போன்: 98840-53859
கே.சந்திரன், வாடிப்பட்டி.
தி ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல வாடிக்கையாளர் பிரிவு அலுவலர் வி. பாஸ்கரன் பதில் சொல்கிறார்.‘‘வழக்கமாக விவசாயக் கடன், பண்ணைக் கடன் போன்றவற்றை வழங்கும்போது, வங்கிகளே காப்பீடு செய்து தருவது கட்டாயமாகக் கடைபிடிக்கப்படுகிறது. மற்றபடி விருப்பம் உள்ளவர்கள் தங்களது கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய எந்தத் தடையும் இல்லை. இதற்காக வங்கிகளில் கடன் பெற்றிருக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை.

Post a Comment