‘‘ஹா ய்
கோமு! சமையல் வேலை முடிஞ்சாச்சா? - மாடிப்படியில்
நின்றிருந்த கோமதியிடம் கேட்டபடி வந்தார் உஷா மேம்.
‘‘தினமும் எங்க வீட்டுல எக்ஸ்பிரஸ் சமையல்தான் ஆன்ட்டி...
அவரோட ‘கேரியர்’ல ஆபீசுக்கு இதுவரை லேட்டாவே போனதில்லை!’’
என்றாள் கோமதி பெருமையாக.
‘‘ஓஹோ! அவரோட ‘கரீயர்’ ( career )
பத்திச் சொல்றியா! ‘கேரியர்’-ல ( carrier )
டிபன் தான் வச்சுக்கலாம்... ஆபீஸ் எப்படினு குழம்பிப் போயிட்டேன்!’’
என்று உஷா மேம் வேடிக்கையாகக் கூறிக் கொண்டிருந்தபோது,
தனக்குத்தானே சிரித்தபடி வந்தாள் வித்யா.
‘‘என்ன வித்யா! உன் முகமெல்லாம் சிரிப்பு?’’
‘‘என் கிளாஸ்ல கடைசி பெஞ்ச் கல்பனா லொடலொடா
பார்ட்டி... அலட்டல் பேர்வழி வேற! நேத்து ஸ்பெஷல் க்ளாஸுக்கு
வந்த நீங்க அவளை கேள்வி கேட்டு மவுனமா நிக்க வச்சிட்டீங்க...
அதை நெனைச்சி சிரிச்சேன்!’’
‘‘ What
question you asked aunty? ’’ என்று
சந்தர்ப்பத்துக்கு காத்திருந்த மாதிரி இங்கிலீஷிலேயே கேள்வி
கேட்ட கோமதியை பாராட்டிய உஷா மேம், வித்யா பக்கம்
திரும்பி, ‘‘கல்பனாவை நானும் நோட் பண்ணியிருக்கேன். லெக்சர்
நடுவுல have -ஐ
எங்கே உபயோகப்படுத்தலாம், எங்கே கூடாதுனு சிம்பிளா
கேட்டேன்.. நின்னுட்டா!’’ என்றார்.
‘‘பேசறதுக்கு கத்துத் தர மட்டுமில்ல, ஒருத்தரை பேசாம
வைக்கறதுக்கு என்ன பண்ணனும்னும் ஆன்ட்டி தெளிவாவே தெரிஞ்சு
வெச்சிருக்காங்க’’ என்று கோமதி கமென்ட் அடிக்க, அந்த
இடமே கலகலப்பானது.
‘‘ஆனா, நீங்க அந்த have
மேட்டரை விளக்காமலே விட்டுட்டீங்க மேம்!’’ என்று வித்யா
சொல்ல, ‘‘அதுக்கு ஒரு தனி கிளாஸே தேவை, வித்யா.
அப்ப சொல்றேன்..’’ என்ற உஷா மேமுடன் சென்று அனைவரும்
வராந்தாவில் உட்கார்ந்தனர். எதிரில் பளிச்சிட்ட வொயிட்
போர்டை பார்த்து வித்யாவும் கோமதியும் ஆச்சர்யம் காட்ட,
‘‘உங்க ளுக்கு எழுதிக் காட்டறதுக்காகவே இதை வாங்கினேன்’’
என்று மார்க்கர் பேனா சகிதம் தயாரானார் மேம்.
‘‘முதல்ல கோமதியைக் கவனிப்போம்.
Information questions பத்தி பார்க்கலாம்.
அது வேற ஒண்ணுமில்ல, wh-
கேள்விதான்!
Yes அல்லது No
பதில் வர்ற கேள்வி களால உரையாடல் சீக்கிரமா முடிஞ்சிடும்.
ஆனா, what,
which, where, when, why, who, whom, how,
how much, how long -னு ஆரம்பிக்கிற கேள்விகளுக்கு
குறைஞ்சது இரண்டு வார்த்தைகளாவது பதில் சொல்லணும். நம்ம
உரையாடலை நீட்டிக்க இந்த வகை கேள்விகள் உதவும். இந்த
மாதிரி கேள்விகளைக் கேட்க நீங்களும் பழகிக் கணும்’’ என்ற
உஷா மேம், வித்யாவிடம், ‘‘ What -க்கும்
Which -க்கும்
என்ன வித்தியாசம்?’’ என்று கேட்டார்.
‘‘ஒரு கூடையில நிறைய பொம்மைகள் இருக்கறதா வெச்சுக்கிட்டா,
What
things are inside -னு பொதுவா கேக்க
What
பயன்படும். Which
toy is Indian made- னு குறிப்பிட்டு கேட்க,
Which
பயன்படும். Am
I correct, ma’m? - சரளமாக சொன்னாள்
வித்யா.
‘‘ Yes,
you’re! நீங்க ஷாப்பிங் போறப்ப இப்படி wh -
கேள்வி கேக்கலாம்...’’ என்ற உஷா மேம் போர்டில் ஒரு
வாக்கியத்தை எழுதினார்.
I
go to Bangalore on Monday.
‘‘கோமு! When- ல
ஆரம்பிச்சு இந்த வாக்கியத்துக்கு ஒரு கேள்வி கேளு.’’
கோமதி சிறிது யோசித்துவிட்டு, ‘‘ When
are you going to Bangalore? ’’ என்றாள்.
‘‘கோமு சொன்ன கேள்வி பரவாயில்ல. கொஞ்ச நேரம்
முன்னாடிகூட ‘ What
question you asked aunty ?’னு கேட்டா.
வித்யா! இந்த ரெண்டு கேள்விகளையும் இன்னும் பெட்டரா எப்படி
கேட்கலாம்?’’
வித்யா சொன்னாள்... ‘‘இப்ப கோமு அக்கா சொன்ன
கேள்வி be
வரிசையில இருக்கு, மேம். ஆனா, நீங்க போர்டுல
எழுதின வாக்கியம் do
வரிசையில இருக்கு. அதனால, ‘ When
do you go to Banagalore ?’னு கேட்டிருக்கணும்.
அதேமாதிரி, முன்னே சொன்ன கேள்வி ‘ What
question did you ask aunty? ’னு இருக்கணும்.’’
‘‘சபாஷ்!’’ என்று வித்யாவைப் பாராட்டிய உஷா மேம்,
கோமதியைப் பார்க்க, அவள் ஏதோ சிந்தனையில் இருந்தாள்.
‘‘கோமு! என்ன பகல் கனவா?’’ என்று சீண்ட, ‘‘ஐயோ,
ஆன்ட்டி, அதெல்லாம் இல்லை. may ங்கிற
மோடல் வெர்ப்-க்கு பல பேர் பலியானாங்கனு போன க்ளாஸ்ல
சொன்னீங்க. ஆனா, அது எப்படினு சொல்லவே இல்லியே...
அதைத்தான் நெனைச்சிட்டு இருந்தேன்!’’ என்றாள். வித்யாவும்
அவளோடு சேர்ந்துகொண்டு, ‘‘என்னையும்கூட அந்தத் தகவல்
பாதிச்சிடுச்சி மேம்..’’ என்றாள்.
‘‘ஓகே. நம்ம நாட்டோட அரசாங்க மொழி எது?’’
‘‘இங்கிலீஷ§ம், இந்தியும்.’’
‘‘1965-ல இங்கிலீஷ§க்கு ஆபத்து வந்தது! அரசியல் சட்டத்துல
‘ English
may continue as an official language as
long as non-Hindi speaking people want
it ’னு திருத்தம் கொண்டு வந்தாங்க. தமிழ்நாட்டுல
அதுக்கு பயங்கர எதிர்ப்பு! முன்னமே சொல்லியிருக்கேன்...
May ன்னா
‘இருந்தாலும் இருக்கலாம்’னு பொத்தாம் பொதுவா ஒரு அர்த்தம்.
இந்த May ஐ
மாத்தி shall
போடணும்னு போராடினாங்க மக்கள். English -ங்கிறது
third
person singular . அதுக்கு வழக்கமா may
அல்லது
will தான் வரும். ஆனா, shall -னு
மாத்திப் போட்டா ஒரு கட்டாயத் தன்மை வந்துடும். அதுக்காகத்தான்
போராட்டம்!’’
‘‘அப்புறம் மாத்தினாங்களா?’’
‘‘ம்... ம்... பல பேர் பலியான பின்னாலதான்...’’
கொஞ்ச நேரம் மவுனம். பிறகு கோமதி, ‘‘ஆன்ட்டி! do
வரிசையில எப்படி கேள்வி கேக்கணும்? அதுக்கு ஏதாவது ஸ்டெப்ஸ்
இருக்கா?’’ என்றாள்.
‘‘பாடத்துக்கு வந்துட்டியா! வெரிகுட்..’’ என்றபடி போர்டில்
ஸ்டெப்ஸ் போட்டு ஒரு வாக்கியத்தை எழுதினார் உஷா மேம்.
வாக்கியம்: I
go to Bangalore on Monday
Step
1 : I go to Bangalore when
Step
2: You do go to Bangalore when
Step
3: When do you go to Bangalore?
எழுதிமுடித்ததும், ‘‘கோமு! நான் எதையெல்லாம் மாத்தி
எழுதியிருக்கேன்?’’ என்று கேட்டார் மேம்.
‘‘ On
Monday -ங்கிற காலத்துக்கான வார்த்தையை எடுத்துட்டு
when
போட்டிருக்கீங்க. மிக்கு பதிலா you.
அப்புறம் go- ங்கிற
verb- ஐ
do
go னு பிரிச்சிருக்கீங்க. கடைசி ஸ்டெப்ல when ஐ
முன்னாடி கொண்டு வந்து கேள்வி வாக்கியமா மாத்தியிருக்கீங்க!’’
‘‘வெரிகுட், வெரிகுட்! அதே வாக்கியத்துக்கு where
ல கேள்வி கேக்கறதுக்கான ஸ்டெப்ஸ் சொல்லு. வா, போர்டுலயே
எழுது.’’
கோமதி எழுத ஆரம்பித்தாள்.
Step
1 : I go where on Monday.
Step
2: You do go where on Monday.
Step
3: Where do you go on Monday?
‘‘குட். இதேமாதிரி does,
did னு பிரிக்க ஹோம் வொர்க் தர்றேன். பண்ணிட்டு
வாங்க. அடுத்த க்ளாஸ்ல அது பத்தி சொல்றேன்’’ என்ற
மேம் தந்த ஹோம் வொர்க்...
1.
I ate two mangoes yesterday (did)
2.
Mala writes a letter today (does)’’
- கத்துக்கலாம்
|
|
|
|
Post a Comment