மைசூர் பருப்பு சூப் ! உடலுக்கு வலிவு தரும் சூப்கள்!!
குளிர்காலத்தில் மாலை வேளையில் நன்கு சூடாக ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றும் போது பஜ்ஜி, போண்டா என்று எண்ணெயில் பொரி...
https://pettagum.blogspot.com/2014/06/blog-post_756.html
குளிர்காலத்தில் மாலை வேளையில் நன்கு சூடாக ஏதேனும் சாப்பிட
வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றும் போது பஜ்ஜி, போண்டா என்று
எண்ணெயில் பொரித்து செய்யப்படும் ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவதற்கு பதிலாக,
உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் வகையில் சூப் செய்து சாப்பிடலாம்.
அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தேங்காய் பால் சேர்த்து செய்யப்படும்
மைசூர் பருப்பு சூப்பை செய்தால், அது இன்னும் வித்தியாசமான சுவையைத் தரும்.
சரி, இப்போது அந்த மைசூர் பருப்பு சூப்பை எப்படி செய்வதென்று
பார்ப்போமா!!!
மைசூர் பருப்பு சூப்
தேவையான பொருட்கள்:
மைசூர் பருப்பு - 1 கப்
ஆலிவ் ஆயில் - 3 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2-3 பற்கள் (நறுக்கியது)
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1/2 கப் (நறுக்கியது)
பட்டாணி - 1/2 கப்
தக்காளி சாறு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் (வேண்டுமானால்)
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி
காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி,
கேரட், மைசூர் பருப்பு, பட்டாணி, தக்காளி சாறு, உப்பு, மிளகாய் தூள்
மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 6 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து,
பருப்பு நன்கு மென்மையாக வேகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
பருப்பானது நன்கு வெந்துவிட்டால், தேங்காய் பால் மற்றும் எலுமிச்சை சாறு
சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, பிரட் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக
இருக்கும்.
Post a Comment