30 வகை முக்கனி சமையல்!30 நாள் 30 வகை சமையல்!!

மு த்தமிழ், மூவேந்தர், மூவண்ணம் என வரிசைகட்டி நிற்கும் சிறப்பான விஷயங்களில்... முக்கனி எனப்படும் மா, பலா, வாழைக்கு தனி இடம் உண்டு. வ...

முத்தமிழ், மூவேந்தர், மூவண்ணம் என வரிசைகட்டி நிற்கும் சிறப்பான விஷயங்களில்... முக்கனி எனப்படும் மா, பலா, வாழைக்கு தனி இடம் உண்டு. விட்டமின்கள் உட்பட பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய இந்தப் பழங்களில், தின்னத் தின்ன திகட்டாத விதத்தில், 30 ரெசிபிகளை இங்கே  செய்துகாட்டி அசத்துகிறார், சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர்.
''இந்த ரெசிபிகளை ஆர்வமும் அக்கறையுமாக செய்து பரிமாறினால்... மூவாசையை துறந்தவர்கள்கூட, நாவாசையை துறக்க முடியாமல், 'இன்னும் கொஞ்சம்’ என்று கேட்டு சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டு குழந்தைகளோ... 'மை மம்மி தி கிரேட்!’ என்று கொண்டாடி மகிழ்வார்கள்'' என உற்சாக மழை பொழிகிறார் தீபா.
மாம்பழ லஸ்ஸி
தேவையானவை:
நன்கு கனிந்த மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், தயிர் - ஒரு கப், பால் - அரை கப் (காய்ச்சி ஆற வைத்தது), ஐஸ்கட்டிகள், சர்க்கரை - தேவைக்கேற்ப.
 
செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து, குளிர வைத்து, சிறிய கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும்.
மாம்பழ அல்வா
தேவையானவை: மாம்பழ விழுது - ஒரு கப், நெய் - கால் கப், சர்க்கரை - ஒரு கப், பாதாம், முந்திரி - தேவைக்கேற்ப.
செய்முறை: சர்க்கரையுடன் மாம்பழ விழுதைக் கலக்கவும். நெய்யில் பாதாம், முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அடிகனமான வாணலியில் சர்க்கரை கலந்த மாம்பழ விழுது, நெய் சேர்த்துக் கிளறவும். நன்கு சுருண்டு வரும்போது இறக்கி... வறுத்த பாதாம், முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.
மாம்பழ ரைஸ் கீர்
தேவையானவை: மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், பச்சரிசி - 4 டீஸ்பூன், பாதாம் - 5, பால் - ஒரு கப் (காய்ச்சி ஆற வைத்தது), சர்க்கரை - ஒரு கப்.
செய்முறை: பச்சரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். பாதாமை துருவவும். பாதியளவு மாம்பழத் துண்டுகளையும், பச்சரிசியையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன் பாலை சேர்த்து ஒரு சுற்று சுற்றி விட்டு இறக்கவும். அடி கனமான பாத்திரத்தில் அரைத்த கலவையை சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்துக் கிளறவும். அரிசி நன்கு வெந்த பின்பு மீதியுள்ள மாம்பழத் துண்டுகள், சர்க்கரை, பாதாம் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி, குளிர வைத்து சாப்பிடக் கொடுக்கலாம்.
ஆம் தால்
தேவையானவை: மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், பச்சை மிளகாய் - 2, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பாசிப்பருப்புடன் மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து குக்கரில் வேகவிடவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயைக் காயவிட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... வெந்த பருப்பு - பழ கலவை, உப்பு, சுத்தம் செய்த மல்லித்தழை சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதை சப்பாத்தி, இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.
மேங்கோ - லெமன் சர்பத்
தேவையானவை: மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,  சர்க்கரை - கால் கப், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: மாம்பழத் துண்டுகளுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, டம்ளரில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறவும். இதனை வடிகட்டியும் பருக லாம்.
மாம்பழ சட்னி
தேவையானவை: மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 3, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பூண்டை தோலுரிக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை வதக்கி ஆறவிடவும். இதனுடன் உப்பு, மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஒரு கிண்ணத்தில் போடவும். இதில் எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, சட்னியுடன் சேர்க்கவும். இதை தயிர் சாதத்துடன் சாப்பிட...  சுவை சூப்பராக இருக்கும்.
மாம்பழ ஸ்வீட் ரைஸ்
தேவையானவை: மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், வடித்த சாதம் - ஒரு கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், நெய் - தேவைக்கேற்ப, பாதாம், முந்திரி - தலா 5, தேன் - 5 டீஸ்பூன்.
செய்முறை: நெய்யில் பாதாம், முந்திரியை வறுக்கவும். மாம்பழத்தை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வடித்த சாதத்துடன் மாம்பழ விழுது, தேன், சர்க்கரை, வறுத்த பாதாம், முந்திரி சேர்த்துக் கலந்து பரிமாறவும். குட்டீஸ்கள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
ஹாட் அண்ட் ஸ்வீட் மேங்கோ சாஸ்
தேவையானவை: மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப், பச்சை மிளகாய் - 2, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: மாம்பழத் துண்டுகளைக் குழைய வேகவிடவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கரையவிடவும். இதனுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, வெந்த மாம்பழத்தை நன்கு மசித்து சேர்த்துக் கிளறி, சாஸ் பதம் வந்த பின்பு இறக்கவும்.
பிரெட், சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் இது!
மேங்கோ - ஆனியன் சாலட்
தேவையானவை: பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
மாம்பழ க்ரானிட்டா
தேவையானவை: மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், இஞ்சித் துருவல் - சிறிதளவு.
செய்முறை: மாம்பழ துண்டுகளுடன் இஞ்சித் துருவலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து, அடுப்பிலேற்றி ஒரு கொதிவிட்டு , அரைத்த விழுது சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவைக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு பிழிந்து கலந்து ஃப்ரீஸரில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து வெளியே எடுத்து கிளறிவிட்டு, மீண்டும் ஃப்ரீஸரில் வைக்கவும். மூன்று மணி நேரத்துக்குப் பிறகு பரிமாறவும்.
முக்கனி ஓட்மீல்
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், மா, பலா, வாழை துண்டுகள் (சேர்த்து) - அரை கப், பால் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் - தேவையான அளவு.
செய்முறை: கொதிக்கும் நீரில் ஓட்ஸ் சேர்த்து வேகவிடவும். இதனுடன் காய்ச்சிய பால், சர்க்கரை, பழத்துண்டுகள் சேர்த்துக் கிளறி இறக்கி, பரிமாறவும்.
ஹெல்தியான காலை நேர உணவு இது!
பலாச்சுளை பச்சடி
தேவையானவை: பலாச்சுளைகள் - 10, பொடித்த வெல்லம் - கால் கப், பச்சை மிளகாய் - 2, அரிசி மாவு - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: பலாச்சுளைகளை நார் எடுத்து, கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கி, நீர் விட்டு வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து... வெந்த பலாச்சுளைகள், வெல்லம், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, அரிசி மாவை கரைத்து விட்டு, கிளறி இறக்கவும்.
பலாப்பழ ஜாம்
தேவையானவை: நன்கு கனிந்த பலாச்சுளைகள் - 10 (பெரியது), வெல்லம் - அரை கப், நெய் - கால் கப்.
செய்முறை: பலாச்சுளைகளை வேகவைக்கவும். ஆறிய பின்பு மத்தால் நன்கு மசிக்கவும். வாணலியில் நெய்யைக் காயவிட்டு... மசித்த விழுது, பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி வைக்கவும்.
இது, சப்பாத்தி (அ) பிரெட்டுக்கு தொட்டுக்கொள்ள மிகவும் ஏற்றது.
பலாப்பழ பால்ஸ்
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், பலாப்பழ ஜாம் - ஒரு கப் (முந்தைய பக்கத்தில் இதற்கான ரெசிபி இருக்கிறது),  நெய் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: மைதா மாவுடன் உப்பு, நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைக்கவும். கையில் சிறிதளவு நெய் தடவிக்கொண்டு, பலாப்பழ ஜாமை சிறிய பந்து போல உருட்டி, மைதா கலவையில் முக்கி எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பலாச்சுளை ஸ்மூத்தி
தேவையானவை: பலாச்சுளைகள் - 5, பால் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், தேன் -  சிறிதளவு, ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பால், சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சி, ஆறவைக்கவும். பலாச்சுளைகளைப் பொடியாக நறுக்கவும். மிக்ஸி ஜாரில் ஐஸ்கட்டிகள், காய்ச்சி ஆற வைத்த பால், பலாச்சுளைகள் சேர்த்து அடிக்கவும். இதை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே சிறிதளவு தேன் விட்டு பரிமாறவும்.
பலாப்பழ அப்பளம்
தேவையானவை: கெட்டியான பலாச்சுளைகள் - 10, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம், உப்பு  - தேவைக்கேற்ப, எண்ணெய் - சிறிதளவு,
செய்முறை: பலாச்சுளைகளை கொட்டை நீக்கி, ஒரு துணியில் கட்டி ஆவியில் வேகவிடவும். ஆறிய பின்பு சுளைகளுடன் உப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, கலவையை கொஞ்சம் எடுத்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு தட்டி, வெயிலில் காயவைத்து எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.
இதை தேவையானபோது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். எண்ணெய் தடவிய வாழை இலை மீது பலாப்பழ கலவையை ஒரு சிறிய உருண்டையாக வைத்து, மேலே மற்றொரு இலையால் மூடி, ஒரு கிண்ணம் வைத்து அழுத்தி, சுற்றியும் இந்த அப்பளத்தை தயாரிக்கலாம்.
பலாச்சுளை சர்ப்ரைஸ்
தேவையானவை: பலாச்சுளைகள் - 10, முந்திரி, பாதாம் - தலா 5, தேன், நெய் - தேவைக்கேற்ப.
செய்முறை: நெய்யில் முந்திரி, பாதாமை வறுத்து எடுக்கவும். பலாச்சுளையின் நடுவில் உள்ள கொட்டையை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பொரித்த பாதாம் (அ) முந்திரி வைத்து மூடவும் (ஒரு சுளைக்குள் பாதாம், மற்றொரு சுளைக்குள் முந்திரி என்று மாற்றி, மாற்றி வைத்து மூடவும்). தேனில் பலாச்சுளையை ஊறவிடவும். அரைமணி நேரம் கழித்து எடுத்து சாப்பிடவும்.
பலாச்சுளை இலை அடை
தேவையானவை: பலாச்சுளைகள் - 20, வெல்லம் - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - தேவைக்கேற்ப, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வாழை இலை - 5, நெய் - 5 டீஸ்பூன்.
செய்முறை: பலாச்சுளையை நெய்யில் வதக்கி ஆறவிட்டு, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், அரிசி மாவு சேர்த்துக் கெட்டியாக பிசையவும். வாழை இலையில் நெய் தடவி, பிசைந்த மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து தட்டி, மேலே தேங்காய்த் துருவல் தூவி, ஆவியில் வேகவிடவும்.
குறிப்பு: பரிமாறும் வரை அடை, இலையுடனேயே இருக்க வேண்டும்.
பலாச்சுளை பொரியல்
தேவையானவை: பலாச்சுளைகள் - 15, பொடித்த வெல்லம் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: பலாச்சுளைகளை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து... பலாச்சுளைகளை சேர்த்து வதக்கவும். பிறகு, லேசாக தண்ணீர் தெளித்து பலாச்சுளைகளை வேகவிடவும். வெந்த பின்பு பொடித்த வெல்லம், உப்பு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து, புரட்டி எடுத்து பரிமாறவும்.
பனானா பைட்
தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று, தேங்காய் துருவல் - கால் கப், தயிர் - அரை கப்.
செய்முறை: வாழைப்பழத்தை தோல் உரித்து வட்டமான துண்டுகளாக்கவும். ஒரு ஃபோர்க் ஸ்பூனால் வாழைப்பழத் துண்டை எடுத்து தயிரில் தோய்த்து ஒரு தட்டில் வைக்கவும். இதே போல எல்லா பழத் துண்டுகளையும் அடுக்கி... பிறகு, தேங்காய் துருவலை மேலே தூவி பரிமாறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், துருவிய நட்ஸ் வகைகளை தூவியும் பரிமாறலாம்.
வாழைப்பழ கறி
தேவையானவை: வாழைப்பழத் துண்டுகள் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - தாளிக்கத் தேவையான அளவு, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, ஆம்சூர் பவுடர் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வாழைப்பழத்தை வட்டமான துண்டுகளாக வெட்டவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், வாழைப்பழத் துண்டுகள், மஞ்சள்தூள், ஆம்சூர் பவுடர் சேர்த்துக் கிளறவும். இதை லேசாக தண்ணீர் தெளித்து வதக்கி... உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இது, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.
பனானா பெர்ரி
தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று, ஸ்ட்ராபெர்ரி - 5, பால் - ஒரு கப், சர்க்கரை - கால் கப், ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப.
செய்முறை: வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டுகளாக்கவும். ஸ்ட்ராபெர்ரியை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். பாலை காய்ச்சி ஆறவிடவும். பாலுடன் பழத்துண்டுகள், சர்க்கரை, ஐஸ்கட்டிகள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஃப்ரிட்ஜில் குளிரவைத்து பருகவும்.
சாக்லேட் - வாழைப்பழ ஷேக்
தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று, சாக்லேட் பார் - ஒன்று, பால் - ஒரு கப், சர்க்கரை - 10 டீஸ்பூன்.
செய்முறை: வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டுகளாக்கவும். சாக்லேட்டை துருவவும். பாலைக் காய்ச்சி ஆறவிடவும். வாழைப்பழத் துண்டுகளுடன் சாக்லேட் துருவல், பால், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, டம்ளரில் ஊற்றி, மேலே சிறிதளவு சாக்லேட் துருவல் தூவி குளிரவைத்து பரிமாறவும்.
குட்டீஸ்கள் இதை மிகவும் விரும்பிப் பருகுவர்.
கிரிஸ்பி பனானா
தேவையானவை: நேந்திரன் வாழை - ஒன்று, மைதா - ஒரு கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், ஓட்ஸ் - தேவைக் கேற்ப, உப்பு - கால் டீஸ்பூன்.
செய்முறை: நேந்திரன் பழத்தை தோல் உரித்து, நடுவில் இரண்டாக வெட்டி, பிறகு பஜ்ஜிக்கு நறுக்குவதுபோல் நீளவாக்கில் நறுக்க வும். ஓட்ஸை ஒரு தட்டில் பரப்பவும். சலித்த மைதாவுடன் உப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை, நீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல கரைக்கவும். வெட்டிய வாழைப்பழ துண்டுகளை மாவில் முக்கி எடுத்து தட்டில் வைத்துள்ள ஓட்ஸ் மீது புரட்டி எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால்... கிரிஸ்பி பனானா ரெடி!
வாழைப்பழ அப்பம்
தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று, மைதா மாவு - ஒரு கப், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, தயிர் - கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - கால் கப், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: மைதாவுடன் ஆப்பசோடா, தயிர், மசித்த வாழைப்பழ விழுது, நெய், சர்க்கரை சேர்த்து, கரைக்கவும். இதை ஒரு மணி நேரம் ஊறவிடவும். எண்ணெயை காயவைத்து, கரைத்த மாவில் இருந்து சிறிது சிறிதாக ஊற்றி பொரித்து எடுக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). இது, உள்ளே சாஃப்ட்டாக இருக்கும்.
நேந்திரம் பழம் புரட்டல்
தேவையானவை: நேந்திரம் பழம் - ஒன்று, நெய் - 4 டீஸ்பூன், தேன் - தேவைக்கேற்ப.
செய்முறை: நேந்திரம் பழத்தை தோல் உரித்து வட்டமான வில்லைகளாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு, நறுக்கிய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே தேனை ஊற்றிப் பரிமாறவும்.
இரும்புச்சத்து நிறைந்த ஹெல்தியான டிஷ் இது.
பனானா - ஐஸ்க்ரீம் டிலைட்
தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று, பால் - ஒரு கப், ஐஸ்க்ரீம் - ஒரு கப், சர்க்கரை - 5 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு  - ஒரு சிட்டிகை.
செய்முறை: வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டுகளாக்கவும். இதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால், சர்க்கரை, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். இதை கிண்ணத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும். பரிமாறும்போது இதன் மீது சிறிதளவு ஐஸ்க்ரீம் போட்டு பரிமாறவும்.
வாழைப்பழம் - பிஸ்கட் ஃபொலட்
தேவையானவை: கேரட் - ஒன்று, வாழைப்பழம் - ஒன்று, பிஸ்கட் - ஒரு பாக்கெட், முந்திரி - 10, நெய் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 5 டீஸ்பூன்
செய்முறை: கேரட்டை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டுகளாக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து எடுக்கவும். கேரட், வாழைப்பழத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். ஒரு தட்டில் பிஸ்கட்டுகளைப் பரப்பி, அதன் மீது அரைத்த கலவையைத் தடவி, மேலே முந்திரியை வைத்து, பரிமாறவும்.
முக்கனி பாயசம்
தேவையானவை: மா, பலா, வாழை துண்டுகள் (சேர்த்து) - ஒரு கப், பால் - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், முந்திரி - 5.
செய்முறை: நெய்யில் முந்திரியை வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் மாம்பழத் துண்டுகளையும், வாழைப்பழத் துண்டுகளையும் சேர்த்து வதக்கி எடுக்கவும். பலாச்சுளைகளை தனியே வேகவைக்கவும். பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். பால் நன்கு சுண்டும்போது பழங்களை நன்கு மசித்துச் சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதனுடன் எசன்ஸ் சேர்த்து, வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.
ஆப்பிள் - வாழைப்பழ ஃப்யூரி
தேவையானவை: ஆப்பிள் - ஒன்று, வாழைப்பழம் - ஒன்று.
செய்முறை: ஆப்பிளை தோல் சீவி துண்டுகளாக்கி ஆவியில் வேகவைக்கவும் (நீரில் போட்டும் வேகவைக்கலாம்). வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டுகள் ஆக்கவும். வேகவைத்த ஆப்பிள் துண்டுகளுடன் வாழைப்பழ துண்டுகளை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கிண்ணத்தில் ஊற்றவும். 6 மாதம் நிரம்பிய குழந்தைகளுக்கு ஏற்ற உணவு இது.

Related

30 நாள் 30 வகை சமையல் 1984488363818313389

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item