பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்...! ஹெல்த் ஸ்பெஷல்!!

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்... இன்று பெரும்பாலான பெண்கள், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரின் அப்பாயிண்ட்மென்ட்டுக்கு காத்திருக்க...

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்...
இன்று பெரும்பாலான பெண்கள், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரின் அப்பாயிண்ட்மென்ட்டுக்கு காத்திருக்கின்றனர். காரணம், பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னைதான். மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக ஹார்மோன் சுரப்பில் பிரச்னை ஏற்படுவதால், பி.சி.ஓ.சி. ஏற்படுகிறது. இதனால் ஒழுங்கற்ற அல்லது நீண்ட மாதவிலக்கு, அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு, உடல்பருமன் போன்றவை ஏற்படுகின்றன.
பொதுவான அறிகுறிகள்
 சோர்வு
 மனப்பதற்றம்
 தூக்கமின்மை
 குழப்பமான மனநிலை
 மன அழுத்தம்
கண்ணால் பார்க்கக்கூடிய அறிகுறிகள்       
  உடல் எடை அதிகரிப்பு
 முகத்தில் ரோம வளர்ச்சி
 முகப்பரு
 வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்தல்
 முகத்தில் கரும்புள்ளி
 மார்பகங்கள் குழாய்போல் சுருங்குதல்
 சருமத்தில் மருக்கள்
உடலுக்குள் ஏற்படும் அறிகுறிகள்
 ஓவரியில் கட்டிகள்
 இன்சுலின் செயல்திறன் பாதிப்பு
 குழந்தையின்மை
 ஒழுங்கற்ற மாதவிலக்கு
 ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பு
காரணங்கள்
உடலில் ஆன்ட்ரோஜென் என்ற ஆண்தன்மை ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதால் சினைப்பையில் நீர்கட்டிகள் ஏற்படுகின்றன. சினைப்பையில் மிகக் குறைந்த அளவில் ஆன்ட்ரோஜென் சுரக்கிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது சினைப்பையில் முட்டை உருவாதல் பாதிக்கப்பட்டு, சீரற்ற மாதவிலக்கு ஏற்படுகிறது. உடலில் அதிகப்படியான இன்சுலின் சுரத்தலும்கூட ஆன்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டுகிறது. தவிர, மரபியல் ரீதியாக அம்மாவுக்கு இருந்தால்கூட பெண்ணுக்கும் பி.சி.ஓ.எஸ். ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. சிகிச்சை எடுத்துக்கொள்ள தவறும்போது சினைப்பை அல்லது கர்ப்பபை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
தடுக்க
உணவு, உடல் உழைப்பின் அளவைச் சீராக்குவதன் மூலம் இந்தப் பிரச்னையில் இருந்து தப்பலாம்.
உடல் எடை
இன்சுலின் செயல்திறன் பாதிக்கப்படுவதற்கு உடல் பருமன் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிப்பதன் மூலம் இன்சுலின் மற்றும் ஆன்ட்ரோஜென் அதிக அளவில் சுரப்பதைக் கட்டுப்படுத்தலாம். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
உணவுப் பழக்கம்
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். எனவே, உணவில் கார்போஹைட்ரேட் சத்து அதிக அளவில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக மொத்தமாக கார்போஹைட்ரேட்டைத் தவிர்த்துவிட வேண்டாம். அதற்குப் பதிலாக காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அதிக அளவில் நார்ச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்வதால், செரிமானத்தைத் தாமதப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவு விரைவாக அதிகரிப்பது தடுக்கப்படும்.
துடிப்பான வாழ்க்கைமுறை
உடற்பயிற்சி செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். பி.சி.ஓ.எஸ். பிரச்னை இருப்பவர்கள் தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யவேண்டும். இது இன்சுலின் அதிக அளவில் சுரந்து ஆன்ட்ரோஜென் அதிக அளவில் உற்பத்தியாவதைத் தடுப்பதுடன், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.

Related

பெண்களை அதிகம் தாக்கும் முதுகு வலி--ஹெல்த் ஸ்பெஷல்,

உலகில் 80 சதவீதம் பேர், வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் கீழ் முதுகு வலியால் அவதிப்படுகிறோம். முதுகுத் தண்டு வடம், ஒன்றன் மீது ஒன்று அமைந்த வகையிலான சிறிய முள்ளெலும்புகளால் ஆனது. இந்த எலும்புகளுக...

பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்--ஹெல்த் ஸ்பெஷல்

பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத...

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் அறிதுயில் மருத்துவம் !

நோய்களைக் குணப்படுத்துவதில் ஹிப்னாசிஸ் என்னும் அறிதுயில் மருத்துவம் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது. இந்த அறிதுயில் மருத்துவம் பொதுவாக அறுவைச் சிகிச்சைக்கு முன்பும் அறுவைச் சிகிச்சைக்குப் பி...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 5:27:48 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,167

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item