ஜூன் 5: கண்ணியமிகு காயிதே மில்லத் பிறந்த தின சிறப்பு பகிர்வு..!

ஜூன் 5: கண்ணியமிகு காயிதே மில்லத் பிறந்த தின சிறப்பு பகிர்வு.. கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் திருநெல்வேலி பகுதியில் உள்ள ப...

ஜூன் 5: கண்ணியமிகு காயிதே மில்லத் பிறந்த தின சிறப்பு பகிர்வு..

கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் திருநெல்வேலி பகுதியில் உள்ள பேட்டை என்கிற ஊரில் அரசர்களுக்கு துணி விற்றுக்கொண்டு இருந்த மதத்தலைவரான மியாகான் ராவுத்தர் அவர்களின் மகனாக பிறந்தார். இளமைக்காலத்திலேயே தந்தையை இழந்து அன்னையின் அரவணைப்பில் அவர் வளர்ந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு கல்லூரி பட்டப்படிப்பு தேர்வை புறக்கணித்தார். பின்னர் முஸ்லீம் லீக் அமைப்பில் இணைந்து செயல்பட்டார்.

விடுதலைக்கு பின்னர் டிசம்பர் மாதத்தில் 1948 இல் கராச்சியில் முஸ்லீம் லீக் கட்சி பாகிஸ்தான் பகுதிக்கு ஒன்று என்றும்,இந்தியாவிற்கு இன்னொன்று என்றும் உடைந்தது. அங்கே பாகிஸ்தான் பகுதியின் தலைவராக திகழ்ந்த லியாகத் அலிகான் ,"உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் காயிதே மில்லத் அவர்களே ! எப்பொழுதும் உதவக்காத்திருக்கிறோம்" என்ற பொழுது ,"எங்களுக்கான தேவைகளை,சிக்கல்களை நாங்களே தீர்த்துக்கொள்வோம். எங்களுக்கு என்று ஒரு தேசமிருக்கிறது. நீங்கள் எங்களுக்கு செய்கிற உதவி ஏதேனும் இருக்குமானால் அது பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள்,சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை பாதுகாப்போடு பார்த்துக்கொள்வது தான் !: என்று கம்பீரமாக சொல்லிவிட்டு நடந்தார்.

இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக செயல்பட்டார். அப்பொழுது எது தேசிய மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்கிற விவாதம் எழுந்தது. பழமையான மொழியே தேசிய மொழியாக வேண்டும் என்கிற வாதம் வைக்கப்பட்ட பொழுது அமைதியாக எழுந்த காயிதே மில்லத் அவர்கள் இப்படி பேசினார் :
" ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். . இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். . இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ ( Part XIV A Languages – Page : 1471 to 1474 – Date 14th September 1949 – Vol : IX)
தேவிக்குளம்,பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவுக்கு போய் சேரும் என்கிற சூழல் நிலவிய பொழுது காமராஜர் அவர்கள் அவை இந்தியாவில் தானே இருக்கிறது என்று சொல்லிவிட இவரோ நாடாளுமன்றத்தில் தனது கட்சிக்கு கேரளாவில் தான் செல்வாக்கு அதிகம் என்று தெரிந்திருந்த பொழுதும் அஞ்சாமல் ,"தேவிக்குளம்,பீர்மேடு ஆகிய பகுதிகளை கேரளாவுக்கு கொடுக்க வேண்டும் என்று இங்கே கேட்கிறார்கள். அவை எல்லையோர பகுதிகள். தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகள். அங்கே அவர்கள் வந்துவிட்டு போகிறவர்கள் என்று அப்பகுதி அரசு சொல்கிறது. பின்னர் எவ்வாறு கடந்த தேர்தலில அவர்கள் அங்கே பெரும்பான்மையாக ஓட்டளித்தார்கள் என்று விளக்க முடியுமா ? அப்பகுதி தமிழகத்தோடு தான் இணைக்கப்பட வேண்டும் !" என்று முழங்கினார்.

சீனா மற்றும் பாகிஸ்தான் உடன் போர் நேர்ந்த பொழுது இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் பாரத தேசத்துக்காக போராடுவார்கள் எங்களின் ஆதரவு முழுமையாக அரசுக்கு உண்டு என்றவர்,சீனா இந்தியாவை தாக்கிய பொழுது ,"சீனாவுக்கு எதிராக முதல் எதிரியாக என்னுடைய பெயரை பதிந்து கொள்ளுங்கள். என் மகனையும் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கிறேன்." என்று நாடாளுமன்றத்தில் தன்னுடைய தேசபக்தியை பதிவு செய்தார். பாகிஸ்தானில் இருந்து வருகிற அகதிகளை கண்டுகொண்ட அரசு மலாய்,பர்மா மற்றும் இலங்கையில் இருந்து வரும் அகதிகளிடம் கரிசனத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.

நேரு அவர்கள் முதல் தேர்தலில் காங்கிரஸ் சின்னத்தில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று இவரைக்கேட்டு கொண்ட பொழுது நாங்கள் தனித்தே நிற்போம் என்று தன்மானத்தோடு சொன்னார். அடுத்தடுத்து மூன்று நாடாளுமன்ற தேர்தல்களில் மஞ்சேரி தொகுதிப்பக்கம் வாக்கு கேட்க ஒருமுறை கூட போகாமலே வெல்கிற அளவுக்கு அவர் செல்வாக்கு கொண்டவராக இருந்தார். இத்தனைக்கும் அவர் தேவிக்குளம்,பீர்மேடு சிக்கலில் தமிழகத்துக்கு ஆதரவான நிலையை எடுத்தார் என்பதை கவனிக்க வேண்டும்.

அண்ணாவின் கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இணைத்து காங்கிரஸ் தோல்வியடைவதை உறுதி செய்கிற வித்தையை அவர் சாதித்தார். அவர் எளிமையின் உச்சமாக இருந்தார். கட்சிக்கு என்று சேர்கிற நிதியில் பைசாவைக்கூட தனக்கென்று அவர் செலவு செய்து கொண்டதில்லை. அவரின் கட்சி அலுவலகத்துக்கு அவர் எப்படி வந்து சேருவார் தெரியுமா ? க்ரோம்பேட்டையில் இருக்கும் எளிய வீட்டில் இருந்து தொடர்வண்டியில் ஏறி பீச் நிலையம் வந்து சேர்ந்து அங்கிருந்து ரிக்சாவில் மண்ணடி போய் சேர்வார்.

மிலாதுநபி விழா நடந்து கொண்டிருந்தது. ஒரு திராவிட இயக்க பிரமுகர் இந்து மத வழிபாட்டு நம்பிக்கையை விமர்சித்து பேசிக்கொண்டு இருந்தார். அவரின் பேச்சை உடனே முடிக்க செய்த கண்ணியமிகு காயிதே மில்லத் இப்படி விளக்கம் தந்தார் ,இது புனிதமிகுந்த மிலாது விழா மேடை. இதில் நபிகள் நாயகத்தின் சிறப்பு, இஸ்லாத்தின் மேன்மை பற்றி மட்டுமே பேசவேண்டும். பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேலி செய்து பேசக் கூடாது. இஸ்லாமிய மார்க்கம் ‘பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேவலம் செய்து பேசாதீர்கள்’ என்று அறிவுறுத்தியிருக்கிறது" என்று அறிவித்தார்.

பதினான்கு கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி இஸ்லாமிய பிள்ளைகள் கல்வியறிவு பெற வழிகோலினார். மேல்சபை,சட்டசபை,லோக் சபா என பல்வேறு ஆட்சி பீடங்களில் பதவி வகித்தாலும் அவரிடம் சொந்தமாக கார் கூட கிடையாது. எளிமை,தேசபக்தி,மொழிப்பற்று,மக்கள் செல்வாக்கு என்று அனைத்தையும் ஒருங்கே பெற்றிருந்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களை அவரின் பிறந்தநாளன்று (ஜூன் ஐந்து ) நினைவு கூர்வோம்


Related

சர்தார் படேல் இஸ்லாமியருக்கு எதிரியா? இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!!

இந்திய ஒருமைப்பாட்டைக் கட்டிக்காப்பதில் நேருவுக்குத் துணைநின்றவர் படேல்    சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் மிகவும் முக்கியமானவர்களாக காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், ராஜாஜி, சர்...

இந்தியாவில் மனித நேயத்தை அகற்றிவிட முடியாது என்று சொல்லாமல் சொல்லும் படம் தான் இந்தப்படம்!

இந்தியாவில் மனித நேயத்தை அகற்றிவிட முடியாது என்று சொல்லாமல் சொல்லும் படம் தான் இந்தப்படம்! Thanks to www.samarasam.net

தந்தை பெரியாரும்... 'அம்மா' ஜெயலலிதாவும்!

தங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர்களை உறவுமுறை சொல்லி அழைப்பது இந்திய அரசியல் வரலாற்றில் மரபான ஒன்றுதான். தேசத்தந்தை, காந்தி தாத்தா, நேரு மாமா, தாத்தா ரெட்டமலை சீனிவாசன், அண்ணா என்றெல்லாம் தலைவ...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 5:27:44 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,167

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item