''தேனீ வளர்ப்புக்கு தோட்டக்கலைத்துறை மானியம் வழங்குவதாகக் கேள்விப்பட்டோம். யாரைத் தொடர்பு கொள்வது?'' விவசாயக்குறிப்புக்கள்!
''தேனீ வளர்ப்புக்கு தோட்டக்கலைத்துறை மானியம் வழங்குவதாகக் கேள்விப்பட்டோம். யாரைத் தொடர்பு கொள்வது?'' - எஸ். கணேசன், பல்ல...

https://pettagum.blogspot.com/2014/06/blog-post_7030.html
''தேனீ வளர்ப்புக்கு தோட்டக்கலைத்துறை மானியம் வழங்குவதாகக் கேள்விப்பட்டோம். யாரைத் தொடர்பு கொள்வது?''
- எஸ். கணேசன், பல்லடம்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர்.பி. இளங்கோவன் பதில் சொல்கிறார்.
''பயிர்களில், விளைச்சலைப் பெருக்குவதில் தேனீக்களின்
பங்கு அதிகமானது. குறிப்பாக, தேனீக்கள் வளர்க்கும்போது 20% கூடுதல் மகசூல்
கிடைக்கிறது. எனவேதான், தேனீ வளர்க்கும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை
மானியம் வழங்கி வருகிறது. தேனீக்கள் காலனி ஒன்றுடன் ஒரு பெட்டியின் விலை
4,400 ரூபாய். இதை 50% மானிய விலையில் 2,200 ரூபாய்க்குக் கொடுத்து
வருகிறோம். விவசாயிகளின் தோட்டத்துக்கே சென்று எங்கள் அலுவலர்கள்
பெட்டிகளைப் பொருத்தித் தருகிறார்கள். ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சம் 20
பெட்டிகள் வரை வைக்கலாம். நிலத்தில் எந்த வகையான பயிர் இருந்தாலும், தேனீ
வளர்ப்பில் ஈடுபடலாம். குறிப்பாக, இந்தப் பயிர்தான் சாகுபடி செய்ய வேண்டும்
என்ற கட்டாயம் இல்லை. ஒருவேளை உங்கள் தோட்டத்தில் உள்ள பயிர்களில் தேன்
இல்லாவிட்டாலும், சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை தேனீக்கள் பறந்து
சென்று, தேனைச் சேகரிக்கும்.
ஒரு பெட்டியில் இருந்து, 45 நாட்களுக்கு ஒரு முறை
குறைந்தபட்சம் 500 மில்லி தேன் கிடைக்கும். பூக்கள் அதிகமாக பூக்கும்
நேரத்தில், தேன் கூடுதலாகக் கிடைக்கும். எப்படி பார்த்தாலும், ஆண்டுக்கு 5
லிட்டர் வரை தேனைச் சேகரிக்கலாம். தற்சமயம் ஒரு லிட்டர், 450 ரூபாய் வரை
விற்பனையாகிறது. ஒரு பெட்டி மூலம் 2,250 ரூபாய் வருமானமென, 20 பெட்டிகள்
மூலம் 45,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். வருமானத்தை, மிகவும்
குறைத்துத்தான் சொல்லியிருக்கிறேன். ஒரு பெட்டியில், 10 லிட்டர் தேன்
எடுக்கும் விவசாயிகள்கூட உள்ளனர். இந்த அளவுக்கு வருமானம் எடுக்க முறையான
திட்டமிடலும், பயிற்சியும் தேவை.
எங்கள் துறை மூலம் தேனீ வளர்ப்புப் பற்றி பயிற்சியும்
கொடுத்து வருகிறோம். மானிய விலையில் தேனீப் பெட்டிகள் வழங்கும் திட்டம்,
தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப் படுகிறது. ஆர்வம் உள்ள விவசாயிகள்,
அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை அலு வலகத்தைத் தொடர்பு கொண்டு
பயன்பெறலாம்.''
தொடர்புக்கு, செல்போன்: 98420-07125.
Post a Comment