மாதவிடாய் கோளாறை சரியாக்கும் முள்ளங்கி! பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்!!

மாதவிடாய் கோளாறை சரியாக்கும் முள்ளங்கி! கு றைந்த விலையில் நிறைந்த சத்துக்களைத் தரும் காய்கறிகளில், முள்ளங்கிக்குத்தான் முதல் இடம். அன்...

மாதவிடாய் கோளாறை சரியாக்கும் முள்ளங்கி!
குறைந்த விலையில் நிறைந்த சத்துக்களைத் தரும் காய்கறிகளில், முள்ளங்கிக்குத்தான் முதல் இடம். அன்றாட உணவில் தவறாது இடம் பிடிக்கும் காய் இது.

முள்ளங்கியின் மகத்துவத்தை அறிந்து, பீட்சா, பர்கர், சான்ட்விச் போன்ற வெளிநாட்டு உணவுகளிலும், முள்ளங்கியைத் துருவிப் பயன்படுத்துகின்றனர். முள்ளங்கியின் மருத்துவப் பலன்களைப் பற்றிக் காரைக்குடி சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் பிள்ளையிடம் கேட்டோம்.
'முள்ளங்கியில் சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி, மஞ்சள் முள்ளங்கி, சுவர் முள்ளங்கி என நான்கு வகைகள் உண்டு. இதில், நாம் அதிகம் பயன்படுத்துவது வெள்ளை, சிவப்பு முள்ளங்கி. சிறுநீரகக் கல்லடைப்பைப் போக்குவதில் முள்ளங்கிக்கு பெரும் பங்கு உண்டு. தாகத்தைத் தணிக்கும். பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னையைத் தீர்க்கவல்லது. முள்ளங்கியை சமைக்கும்போது, நாம் பெரும்பாலும் அதனுடைய கீரையைப் பயன்படுத்துவது இல்லை. முள்ளங்கி வாங்கும்போதே அதன் கீரையோடு வாங்குவது நல்லது.  மதிய உணவில், முள்ளங்கிக் கீரையில் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுவந்தால், மூட்டுவலி, தசைவலி நீர்க் கடுப்பு, எரிச்சலைக் கட்டுப்படும். அதேபோல், மார்பக நோய்களைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இந்தக் கீரைக்கு உண்டு. சிலர், முள்ளங்கியை பச்சையாகச் சாப்பிடுவார்கள். இதனால், தொண்டையில் எரிச்சல், கரகரப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. வேகவைத்துச் சாப்பிடுவது இந்தப் பிரச்னை வராமல் தடுக்கலாம்.
ஆண்களுக்கு:
நீர்த்தடத்தில் ஏற்படக்கூடிய நீர்எரிச்சல், நீர் குத்தல், சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுதல், உயிரணுக்கள் வெளியேறுவது போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு முள்ளங்கிதான் மருந்து. ஆண்களின் தவறான பழக்கத்தினால் ஏற்படும் மர்ம நோய்கள், சிறுநீருடன் உயிரணுக்கள் அதிகமாக வெளியேறுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தகாத உறவினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்க, முள்ளங்கியைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.  
பெண்களுக்கு:
பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல், கர்ப்பவாய்ப்புண், மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அதிக உதிரப்போக்கு ஆகியவற்றைக் கட்டுபடுத்தக்கூடிய தன்மையும் முள்ளங்கிக்கு உண்டு. மேலும் வாதப் பிணி, வயிற்று எரிச்சல், குடல் விருத்தி நோய், கல்லடைப்பு, இருமல், பல்வலி போன்றவற்றுக்கும், முள்ளங்கி சிறந்த ஒரு உணவு. தூக்கமின்மையாலும் உடல் மெலிந்து இருப்பவர்கள் தினமும் முள்ளங்கியை உண்டுவர, உடல் வலிமை பெறும். உடலில் உள்ள சத்துக்கள் வெளியேறுவதைத் தடுக்கவும், சிறுநீரை சீராக்கும் தன்மையும் இந்த முள்ளங்கிக்கு உண்டு.
முள்ளங்கி அல்வா
முள்ளங்கியை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அல்வா செய்து கொடுக்கலாம். முள்ளங்கியை நன்றாகத் துருவி குக்கரில் வேகவைக்கவும். இதனுடன் சமஅளவு நாட்டு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து உரலில் இடிக்கவும்.  நல்ல மிருதுவாகும். முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கும்போது, சிறிது ஏலக்காய், நெய் சேர்க்கவும்.  முள்ளங்கி அல்வா ரெடி.
டிப்ஸ்...
இரவில் அதிக தூரம் பயணம் செய்பவர்கள், தண்ணீர் குறைவாக குடிப்பவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் முள்ளங்கியுடன் சமஅளவு நெருஞ்சில் வேர் அல்லது முள்ளங்கி மட்டுமேகூட அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
 சர்க்கரை நோயாளிகள், ஒரு துண்டு முள்ளங்கியுடன் மிதிபாவக்காய் சேர்த்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் கட்டுபடும்.
 முள்ளங்கியுடன் கேரட், மிதிபாவக்காய் தலா ஒன்று சேர்த்து அரைத்து சாறு எடுத்து குடித்து வரலாம். அல்லது முள்ளங்கியும் கேரட்டும் அரைத்து ஜீஸ் மாதிரி செய்தும் உண்டுவந்தால் நல்லது.

Related

பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் 1748188846921366386

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item