சான்றிதழ்களை லேமினேட் செய்யவேண்டாம்-இதைப் பண்ணாதீங்க ப்ளீஸ்..!
இதைப் பண்ணாதீங்க ப்ளீஸ்..! ப த்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப...

https://pettagum.blogspot.com/2014/06/blog-post_17.html
இதைப் பண்ணாதீங்க ப்ளீஸ்..!
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜனிடம்
கேட்டபோது, ''பொதுவாகவே மாணவ, மாணவிகள் தங்களின் பள்ளிச் சான்றிதழ்களை
லேமினேட் செய்வது வழக்கமாக இருக்கிறது. மேற்படிப்புக்காக வெளிநாடுகள்
செல்வதற்கு விசா பெறும்போது, சான்றிதழ்களை சரிபார்க்கும் வெளிநாட்டு
தூதரகங்கள்... சான்றிதழ்களின் பின்புறத்தில் ரப்பர் ஸ்டாம்ப் மற்றும்
பேனாவால் எழுதுவார்கள். இதற்காக லேமினேஷனை பிரிக்க வேண்டிய கட்டாயம்
ஏற்படும். இப்படி பிரிக்கும்போது, சான்றிதழ்கள் கிழிந்துகூட போய்விடும்.
இதுமட்டுமல்ல, 'இப்படிச் சான்றிதழ்களின் லேமினேஷனை
பிரிப்பதில் எங்களுக்கு நிறைய சிரமங்கள் ஏற்படுகின்றன' என்று பல நாட்டு
தூதரகங்களில் இருந்தும் தொடர்ந்து எங்களுக்குப் புகார்கள் வந்தன.
'சான்றிதழ்களை லேமினேட் செய்யவேண்டாம் என்று உங்கள் மாணவர்களுக்கு
அறிவுறுத்துங்கள்' என்றும் தூதரகங்களில் இருந்து கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்தே, சான்றிதழ்களை லேமினேட் செய்யவேண்டாம் என அறிவித்தோம். மேலும்
வேலைவாய்ப்பு அலுவலக பதிவின்போதும் இதேபோன்ற சிக்கல்கள் இருப்பதால்,
லேமினேஷன் செய்வதை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். தரமான பேப்பரில்தான்
நாங்கள் சான்றிதழ் வழங்குகிறோம். எனவே, சாதாரணமாகப் பயன்படுத்தும் லீஃப்
ஃபைலே போதும்'' என்று சொன்னார்.
Post a Comment