வீட்டிலே இருக்கிறார் வைத்தியர்! மருத்துவ டிப்ஸ்!!
வீட்டிலே இருக்கிறார் வைத்தியர்! மே ற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை மூலிகைகளைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்து வந்து வளர்ப்பதில்...

https://pettagum.blogspot.com/2014/06/blog-post_3726.html
வீட்டிலே இருக்கிறார் வைத்தியர்!
மேற்குத்
தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை மூலிகைகளைத் தேடிக் கண்டுபிடித்து
எடுத்து வந்து வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டிவருபவர் சித்த மருத்துவர்
மைக்கேல் ஜெயராஜ். நெல்லை, பாபநாசத்தில் பல ஏக்கர் நிலத்தில் வீரமாமுனிவர்
மூலிகைப் பண்ணையை நடத்திவருகிறார். இந்தப் பண்ணையிலிருந்து மூலிகைச்
செடிகளை ஒரு லட்சம் பேருக்கும் மேல் கொடுத்து வளர்க்கச் செய்கிறார்.
பள்ளிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன வளாகங்களில் இவரே மூலிகைச்
செடிகளை நடவு செய்வதுடன் அதன் மருத்துவக் குணங்களை விளக்கி, அதனை அங்குள்ள
ஊழியர்கள் பராமரிக்கும் சூழலை உருவாக்குகிறார்.
'உடல் ஆரோக்கியத்துக்காக ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும்
ஒரு மூலிகைச் செடி கட்டாயம் வளர்க்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி
விழிப்புஉணர்வு பிரசாரம் செய்து வருபவரிடம், 'வீட்டுத் தொட்டிகளில் எந்த
வகையான மூலிகைகளை வளர்க்கலாம்? அந்த மூலிகைகளின் மருத்துவப் பயன் என்ன?’
எனக் கேட்டோம்.
'அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும் மூலிகைகள்
இருக்கும். தற்போது, பெருநகரங்களில் குடியிருப்பதற்கே சிறிய வீடுதான்.
இடப்பற்றாக்குறை காரணமாக மூலிகை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவது இல்லை. ஆனால்,
மக்கள் நினைப்பது போலச் செடிகளை வளர்ப்பதற்கு வீட்டின் முன்பாகவோ அல்லது
பின்புறத்திலோ நிறைய இடவசதி தேவை இல்லை. சாதாரணப் பூந்தொட்டிகளில்கூடச் சில
முக்கியமான மூலிகைகளை வளர்க்க முடியும். காய்ச்சல், தலைவலி, சிறிய காயம்
போன்ற சின்னச் சின்ன உபாதைகளுக்கு ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டிய அவசியம்
இருக்காது. அதனால் வீட்டுக்கு ஒரு மூலிகையாவது இருந்தால் நோய்களில் இருந்து
தப்ப முடியும். அதனை வலியுறுத்தியே எனது பயணம் தொடர்கிறது. இப்போது
மக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருவதைப் பார்க்கையில், சீக்கிரத்தில் என்
லட்சியத்தை எட்ட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என்கிறார்
உற்சாகமாக.
மஞ்சள் கரிசலாங்கண்ணி
வல்லாரைக் கீரை 
வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்பு உள்ளிட்ட தாது
உப்புக்கள் இதில் அதிகம். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி,
ரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயலைச் செய்யும் சக்தி இந்தக் கீரைக்கு
இருப்பதால், ஞாபக சக்திக்கு முக்கியப் பங்காற்றுகிறது. உடல் புண்களைக்
குணமாக்குவதுடன், மூளை சோர்வைப் போக்கும். நரம்புத் தளர்ச்சிக்கும்,
இதயத்தைப் பலப்படுத்தவும், தாது விருத்திக்கும் நல்லது. வல்லாரை இலையை
வாயில் போட்டு மென்று விழுங்கினால், குடல் புண், குடல் நோய்,
வாய்ப்புண்கள், வாய் நாற்றம் போன்றவை நீங்கும். கீரையைச் சமைக்கும்போது
புளி சேர்க்கக் கூடாது.
பிரம்மி
நிலவேம்பு 
சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலை சரிப்படுத்துவதிலும்
மூலிகை முதல் பங்கு வகித்தது. கொடி போல் படரக்கூடிய மூலிகை. மூலிகையைப்
பொடித்து, கசாயம் செய்து குடித்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கும். உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டு.
பசியைத் தூண்டும். சாதாரண வைரஸ் காய்ச்சல் உள்பட அனைத்துக்
காய்ச்சல்களையும் குணமாக்ககூடியது. வருமுன் தடுக்கவும் செய்யும்.
பிரண்டை
திப்பிலிக்கொடி
திப்பிலி எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம்
எடுத்து தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டுவந்தால், இருமல், தொண்டைக்
கமறல், பசியின்மை, தாது இழப்பு ஆகியவை குணமாகும். இரைப்பை, கல்லீரல்
வலுப்பெறும். தேமல் நோய் மறையும். திப்பிலிப் பொடி, கடுக்காய் பொடியை சம
அளவில் கலந்து இலந்தைப்பழ அளவுக்கு இரண்டு வேளையாக மூன்று மாதங்கள்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இளைப்பு நோய் இருந்த இடம் தெரியாமல்
ஓடிப்போகும்.
ஓமவல்லி
துளசி
வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளில் துளசி முக்கியமானது. இதன் இலைகளில் இரண்டை
நாள் தோறும் சாப்பிட்டுவந்தால், குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் வராது. கிருமிநாசினி.
துளசி இலையைப் போட்டு ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து பருகி
வந்தால், சர்க்கரை நோய் நம்மை நெருங்காது. குளிக்கும் நீரில் முந்தைய நாளே
போட்டுக் குளித்தால், உடலில் வியர்வை நாற்றம் ஏற்படாது. மன இறுக்கம், ஞாபக
சக்தி இன்மை, நரம்புக் கோளாறு, ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை நோய்களை
உடனுக்குடன் குணமாக்கும் சக்தி துளசிக்கு உண்டு.
தூதுவளை
வாதப் பித்தத்தைச் சரிப்படுத்தும். நோய் எதிர்ப்பு
சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தி பலப்படும். தூதுவளையை நன்றாக அரைத்துத்
தோசை மாவுடன் கலந்து அடை போலச் செய்து சாப்பிட்டால், ஜீரண சக்தியை
அதிகப்படுத்தும். காது மந்தம், நமைச்சல், வயிறு மந்தம் போன்ற
பிரச்னைகளுக்குச் சிறந்த மருந்து.
நொச்சி
கொசுக்கள் அருகில் வராது என்பதால், தமிழக அரசும் இதனை வீடுகளில் வளர்க்கும்படி
பரிந்துரைக்கிறது. இலையைச் சூடான நீரில் போட்டு ஆவி பிடித்தால், தலைவலி,
காய்ச்சல், சளித்தொல்லை, கை கால் வலி நீங்கும். இரவில் தலையில் வைத்துப்
படுத்தால், தலைவலி, தலை நீர், தலை பாரம், நரம்பு வலி, கழுத்து வீக்கம்,
மூக்கடைப்பு போன்றவை குணமாகும். இதன் சாறை உடலில் இருக்கும் கட்டிகளின்
மீது இரவு நேரத்தில் பற்று போட்டுவந்தால், கட்டிகள் மறைந்துவிடும். நொச்சி
சாறைத் தேய்த்தால் நரம்பு பிடிப்பு, இடுப்பு வலி நீங்கும். இலைகளை அரைத்து
மூட்டுகளில் கட்டினால், நாள்பட்ட மூட்டுவலி தொல்லையில் இருந்து
விடுபடலாம்.
Post a Comment