பாரம்பரிய ஃபர்ஸ்ட் எய்ட்! ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்- 10
பாரம்பரிய ஃபர்ஸ்ட் எய்ட்! ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்- 10 மருத்துவர்.கு.சிவராமன் 'எ ன்ன ஷாலு குட்டி... காலங்கார்த்தால ...

https://pettagum.blogspot.com/2014/06/10_16.html
பாரம்பரிய ஃபர்ஸ்ட் எய்ட்!
ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்- 10
மருத்துவர்.கு.சிவராமன்
'என்ன ஷாலு குட்டி... காலங்கார்த்தால புது யூனிஃபார்மெல்லாம் போட்டுட்டு எங்க கிளம்பிட்ட? காலேஜுக்கும் யூனிபார்ம் வந்திடுச்சா?'
' 'ஃபர்ஸ்ட் எய்டு’ கிளாஸ் போறேன் பாட்டி. என் காலேஜ்ல அதுக்கு இப்ப ஸ்பெஷல் கோச்சிங் நடக்குது.'
'சூப்பர்... ரொம்ப அவசியமானதுதான். அதே சமயம், ஃபர்ஸ்ட்
எய்டில் பல விஷயங்கள் நம்ம பாரம்பரியத்துலயே இருக்கு. அந்தக் காலத்துல என்
மாமியார் எனக்கு நிறைய ஃபர்ஸ்ட் எய்டு விஷயம் சொல்லியிருக்காங்க.'
'ஓ... நீ, அந்தக் காலத்து ரெட் கிராஸா? கொஞ்சம் விரிவாத்தான் சொல்லேன்.'
'தாமதிக்காம மருத்துவர்கிட்ட ஓடவேண்டிய அவசர பிரச்னை
எது? எதெல்லாம் நோயோட அறிகுறி? எது ரொம்ப அலட்டிக்க வேண்டாத சின்னப்
பிரச்னை? என்ற அடிப்படை விஷயங்களை எல்லாருமே தெரிஞ்சுக்கணும். ஒரு டம்ளர்
ஓம வாட்டரில் ஏப்பத்தோடு போக வேண்டிய மார்வலி, இருபதாயிரம் ரூபாய்
ஆஞ்சியோகிராமில் நிஜமாவே வந்து நிக்குதே... இது கைவைத்திய முதலுதவியை
மறந்ததால்தான்.'
'நூத்துக்கு நூறு உண்மை. நேத்துக்கெல்லாம் நம்ம வீட்டு விஸ்வாக்குட்டி இருமிக்கிட்டே
இருக்கானே... அதுக்கு ஏதாவது சொல்லு.'
'சளி இருமலுக்குச் சிறந்த முதலுதவி மருந்து, ஆடாதொடை
இலை. அதிகமா கசப்பா இருக்கிற இந்தச் செடியின் சாறோடு தேன் சேர்த்து ஒரு
'சிரப்’ மாதிரி செஞ்சுவெச்சுக்கலாம். கொடிய இருமலுக்கும் சளி வர மிகவும்
கஷ்டப்படுற இரைப்போடு, நீடிச்ச இருமலுக்கும் அற்புத மருந்து. இலை உலர்
பொடியை கஷாயமாக்கி 30 - 60 மி.லி எடுத்துக் கசப்புப் போகத் தேன் சேர்த்தும்
கொடுக்கலாம்.
'சளி இல்லாமல் வர்ற, வறட்டு இருமலுக்கு?'
'இனிப்பு சுவையோடு இருக்கிற அதிமதுரம், வறட்டு
இருமலோடு, வயித்து வலியையும் போக்கும். சிறு துண்டை நாக்குல அடக்கி, அதன்
சாறை விழுங்கினாலே வறட்டு இருமல் நீங்கிடும். சிலருக்கு, வறட்டு
இருமலின்போது, சிறுநீர் சிந்தும் பிரச்னைகூட வந்திடும். அதற்கான முதல்
உதவியும் அதிமதுரம்தான்.'
'சளியோட, முகத்துல நீர்கோத்திருந்தா?'
'தண்ணியில நொச்சி இலை, மஞ்சள் போட்டு ஆவி பிடிக்கலாம்.
படுக்கிறப்ப, மஞ்சள் சுக்கு சேர்த்து அரைச்சு, நெற்றியில் பற்றுப் போடலாம்.
காலையில் தலைவலி காணாமல் போகும். முகமும் ஃப்ரெஷ்ஷாயிடும்.'
'காய்ச்சல் வந்தால்..?'
'சாதாரண வைரஸ் காய்ச்சலில் இருந்து டெங்கு,
சிக்குன்குனியா வரை எல்லாக் காய்ச்சலுக்கும் முதல் மருந்து நிலவேம்புக்
கசாயம்தான். நிலவேம்போடு பற்படாகம், மிளகு, விலாமிச்ச வேர், வெட்டி வேர்,
பேய்ப்புடல்னு இன்னும் ஏழு மூலிகைங்க சேர்த்து செஞ்சப் பொடியை கண்ணாடி
புட்டியில் போட்டு, எப்பவும், அடுப்பங்கரையில் வைச்சிருக்கறது நல்லது.
காய்ச்சல் எடுத்தா, 60 மி.லி இரண்டு வேளையா 3 நாளைக்குச் சாப்பிட்டு வந்தா,
3-5 நாள்ல காய்ச்சல் குணமாகும். காய்ச்சல் குறையலைன்னா, கழுத்திருக்கம்,
பல் ஈறில் ரத்தம் கசிவது, நீர் வற்றி உலர்ந்துபோவது, வலிப்பு, மாதிரி
குறிகுணம் இருந்ததுனா, தாமதிக்காம மருத்துவர்கிட்ட போயிடனும்.'
'சில சமயம், வயிறு உப்பிப் புஸ்னு ஆயிடுதே... அதுக்கு?'
'ஏற்கனவே வீட்டுல செஞ்சுவெச்சிருந்த அன்னப்பொடி
இல்லேன்னா, அஷ்ட சூரணத்தை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து வெந்நீரில் போட்டு
சாப்பிடணும். வயிறு செரிக்காமல், உப்புசமா, வயிற்றுப்போக்கு இருந்தால்
ஓமத்தை வறுத்து கசாயமாக்கி 30-60 மி.லி சாப்பிடலாம். ஓமவாட்டரை இருந்தால்,
10 மி.லி அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து அரை டம்ளர்
குடிக்கலாம். மோரில் பெருங்காயம் கலந்து குடிக்கலாம். முதுகில்
வாயுப்பிடிப்பும் சேர்ந்து இருந்தா, வாய்விடங்கம், சுக்கு, மிளகு, சாரணை
வேர் சேர்த்து கசாயமாக்கி இரண்டு வேளை சாப்பிடலாம்.'
'அஜீரணத்தாலே வர்ற கிறுகிறுப்புக்கு..?'
'பித்தம், வர்ற வெர்ட்டிகோ என்கிற உட்காது பிரச்னைக்கும் சரி... முதலுதவியே கரும்புச்சாறுல சீரகத்தூளைப் போட்டுச் சாப்பிடுறதுதான்.'
'காலில் சிராய்ப்பு ஏற்பட்டா?'
'மஞ்சள் தூளை நீரில் கலந்து, லேசா வெதுவெதுப்பான சூட்டுல பற்று போட்டா, புண்ணும் ஆறும். நோய்க்கிருமியும் தாக்காது.'
'அதுவே கொஞ்சம் வீங்கிடுச்சுன்னா?'
'நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கிற மூசாம்பரம்
வாங்கி, வெந்நீரில் அரைச்சுப் போடலாம். சரி... திருவிளையாடல் 'தருணி’
மாதிரி... கேள்விகளை அடுக்கிட்டே இருக்கியே... கிளாஸுக்கு நேரமாகலையா?'
'அத்தனை விஷயமும் உன்கிட்டயே கத்துக்கிட்டேனே... போகணுமானு யோசிக்கறேன் பாட்டி...'
''உதைபடுவே... ஓடு நவீன முதலுதவி பத்தி படிச்சிட்டு வந்து எனக்குச் சொல்லிக்கொடு.''
- மருந்து மணக்கும்...
Post a Comment