மருத்துவ டிப்ஸ்!
மருத்துவ டிப்ஸ் கீ ழாநெல்லியை பால் விட்டு அரைத்து, நெல்லிக்காய் அளவு 3 நாள் தொடர்ந்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால், குடலி...

https://pettagum.blogspot.com/2014/04/blog-post_23.html
கீழாநெல்லியை
பால் விட்டு அரைத்து, நெல்லிக்காய் அளவு 3 நாள் தொடர்ந்து காலை வேளையில்
மட்டும் சாப்பிட்டு வந்தால், குடலில் தேங்கியிருக்கும் பித்தவாயு
வெளியேறிவிடும். இதுமட்டுமல்லாமல்... குடல் வீக்கம், வயிற்றுமந்தம்
சரியாகும்.
பொடுகுத்
தொல்லை, முடிகொட்டுதல் பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா? சின்ன வெங்காயத்தை
மையாக அரைத்து, அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக்
கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு... வெதுவெதுப்பான நீரில்
குளித்து வந்தால் பலன் கிடைக்கும். இதை
வாரம் ஒருமுறை செய்து வந்தால் இரண்டொரு மாதங்களிலேயே வித்தியாசத்தைப் பார்க்கலாம்.
குழந்தைகளோ, பெரியவரோ... யாராக இருந்தாலும், வயிற்றுவலியால்
அவதிப்படும்போது,
10 புதினா இலைகளை வெறுமனே வதக்கி, ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க
வைத்து, பாதியாக வற்றியதும் இறக்கி, ஆற வைக்கவும். இதை காலை, மதியம், மாலை
என கொடுத்து வந்தால், வயிறுவலி மட்டுமில்லாமல் வயிறு சம்பந்தமான எல்லா
பிரச்னைகளும் சரியாகும். குழந்தைகளுக்கு அளவைக் குறைத்துக் கொடுப்பது
நல்லது.
பிரண்டையின்
மேல்பகுதியில் உள்ள நாரை உறித்து எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து, பச்சை
நிறம் மாறி பொன்னிறமாக ஆகும்வரை வதக்க வேண்டும். அத்துடன் காய்ந்த மிளகாய்,
புளி, உப்பு, உளுந்து, தேங்காய் சேர்த்து அரைத்து துவையலாக
சாப்பிட்டால்... வயிற்றுப்பொருமல், வாயுத்தொல்லை விலகுவதோடு உடம்புக்கு
பலமும் தரும்.
Post a Comment