பலாப்பழ இட்லி! சமையல் குறிப்புகள்-சைவம்!
ப லாப்பழ இட்லி தேவையானவை: கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ஓட்ஸ் - தலா ஒரு கப், தேங்காய்த் துருவல் - அரை கப், பலாச்சுளைகள் - 8, வெல்லப்பாகு...
https://pettagum.blogspot.com/2014/04/blog-post_139.html
பலாப்பழ இட்லி
தேவையானவை:
கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ஓட்ஸ் - தலா ஒரு கப், தேங்காய்த் துருவல் -
அரை கப், பலாச்சுளைகள் - 8, வெல்லப்பாகு - தேவையான அளவு, நெய் - ஒரு
டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள், உப்பு - தலா ஒரு சிட்டிகை.
செய்முறை: தேங்காய்த்
துருவல், பலாச்சுளையை சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். இதனுடன்
கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ஓட்ஸ், வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், உப்பு,
நெய் ஆகியவற்றை கலந்து, தண்ணீர் விட்டு, இட்லி மாவு பதத்தில் கலந்து
வைக்கவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு, மாவை இட்லித் தட்டில் ஊற்றி,
ஆவியில் வேகவைத்துப் பரிமாறவும்.
வெல்லப்பாகுக்கு பதில், சர்க்கரைப் பாகு சேர்த்தும் தயாரிக்கலாம்.
Post a Comment