இன்றைய சமையல்! - 14 வெஜிடபிள் கட்லெட்! சமையல் குறிப்புகள்-சைவம்!
இன்றைய சமையல்! - 14 வெஜிடபிள் கட்லெட் ''இது சம்மர் நேரம்... பிள்ளைகள் அதிகமாக வீட்டில் இருக்கும் நேரமும் கூட! எனவே, அவர்கள...
https://pettagum.blogspot.com/2014/04/14.html
இன்றைய சமையல்! - 14
வெஜிடபிள் கட்லெட்
''இது சம்மர்
நேரம்... பிள்ளைகள் அதிகமாக வீட்டில் இருக்கும் நேரமும் கூட! எனவே,
அவர்களுக்காக ஹெல்தி ஸ்நாக்ஸ் அயிட்டமான வெஜிடபிள் கட்லெட் எப்படி செய்வது
என்பது பற்றி இந்த முறை சொல்கிறேன். நான் பார்த்த பெரும்பாலான வீடுகளில்
கட்லெட் செய்வது என்பது சற்று சிரமமான விஷயமாகவே இருக் கிறது. அதைப் பற்றி
கீழே சொல்கிறேன்'' என்றபடி ரெசி பியை நமக்கு அளித்தார், செஃப் தாமு.
வழக்கம்போல அதை சூப்பராக செய்துகாட்டி னார் சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி
அஞ்சனா ராவ்.
தேவையானவை: உருளைக்கிழங்கு
- 200 கிராம், கேரட் - 100 கிராம், பீன்ஸ் - 50 கிராம், வேகவைத்த சென்னா -
ஒரு கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் -
ஒன்று, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பிரெட் க்ரம்ஸ் - 150 கிராம், மைதா -
ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை
வேகவைத்து பத்து நிமிடம் ஆறவிடுங்கள். சூடு ஆறியதும் தோலை உரித்து,
கைகளால் நன்றாக மையாக மசித்துக்கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து
சூடானதும், இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம்,
கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சிறிது உப்பு சேர்த்து நன்கு
வதக்கிக்கொள்ளுங்கள். வதக்கிய காய்கறிகளை மசித்த உருளைக் கிழங்குடன்
சேர்த்து பிசைந்து வையுங்கள்.
இனி, வேகவைத்த சென்னாவை மிக்ஸியில் போட்டு மையாக
அரைத்து எடுத்து, உருளைக் கலவையோடு சேர்த்து உருண்டையாக உருட்டி வையுங்கள்.
இப்போது மைதா, உப்பு, மிளகுத்தூள் மூன்றையும் லேசாக தண்ணீர் சேர்த்து,
திக்கான பேஸ்ட் பதத்துக்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். உருட்டிய
உருண்டைகளை மைதா பேஸ்ட்டில் முக்கி எடுத்து, அப்படியே பிரெட் க்ரம்ஸில்
போட்டு புரட்டி, அதன் பிறகு நீங்கள் விரும்பிய வடிவத்துக்கு ஷேப்
செய்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் ஷேப் செய்த
வடிவத்தைப் போட்டு பொரித்தெடுத்தால், சுவையான கட்லெட் ரெடியாகிவிடும்.
சென்னாவில் புரோட்டீனும், காய்கறியில் வைட்டமின்களும், உருளையில் மாவுச்சத்தும் இருப்பதால் குழந்தைகளுக்கு அருமையான ஸ்நாக்ஸ் இது.
பின்குறிப்பு: உருளையை
வேகவைத்ததும் நேரடியாக குழாய் தண்ணீரில் காட்டி உரிக்காதீர்கள். அப்படி
செய்தால், உருளை தண்ணீர் பட்டு 'சொதசொத’ என்றாகிவிடும். அதில் செய்யப்படும்
கட்லெட் க்ரிஸ்பியாக வராது.
மேலே சொன்ன முறைகளை ஃபாலோ செய்தாலே அருமையான, க்ரிஸ்பியான கட்லெட் கிடைத்துவிடும்.
Post a Comment