ஆரஞ்சு - மிளகு ரசம்! சமையல் குறிப்புகள்-சைவம்!
ஆரஞ்சு - மிளகு ரசம் தேவையானவை: பழுத்த ஆரஞ்சு - 2, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு,...
https://pettagum.blogspot.com/2014/04/blog-post_7505.html
ஆரஞ்சு - மிளகு ரசம்
தேவையானவை: பழுத்த
ஆரஞ்சு - 2, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, எலுமிச்சை பழம் - அரை
மூடி, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு -
தேவையான அளவு.
செய்முறை: ஆரஞ்சு
பழத்தை உரித்து, விதைகளை நீக்கி, சுளைகளை மிக்ஸியில் போட்டு அடித்து,
சக்கையை வடிகட்டி, சாறு எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். மிளகு -
சீரகத்தை பொடித்துக்கொள்ளவும். இந்தப் பொடியை 4 டம்ளர் தண்ணீரில்
கலக்கவும். கடாயில் நெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து... மிளகு
- சீரக தண்ணீர், உப்பு, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து
கொதிக்கவிட்டு, இறக்கவும். இதில் ஆரஞ்சு சாறு விட்டுக் கலக்கி...
எலுமிச்சையைப் பிழியவும். பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
இந்த ரசம்... புது நிறத்தோடு, சுவையில் அசத்தும்! புளியில்லா பத்தியம் இருப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது.
Post a Comment