சமையல் டிப்ஸ்!
நீ ண்ட தூரம் ரயிலில் பயணம் செய்யும்போது இரண்டு, மூன்று வேளைக்கான சப்பாத்திகளை எடுத்துச் செல்வோம். அவை உலர்ந்து அட்டை போல ஆகி விடாமல் இர...

https://pettagum.blogspot.com/2014/04/blog-post_2084.html
இஞ்சி,
மிளகாய் சேர்த்து அரைப்பதால், சில குழந்தைகள் அடை சாப்பிடாமல் அடம்
பிடிப்பார்கள். அவர்களுக்கு அடை மாவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பீட்ரூட்,
சௌசௌ போன்ற இனிப்பான காய்களைத் துருவிச் சேர்த்து, சின்னச் சின்ன கட்லெட்
போல தோசைக் கல்லில் சுட்டு, வெல்லம் அல்லது தக்காளி
சாஸுடன் கொடுத்துப் பாருங்கள்... பிளேட் காலி!
கசப்பில்லாத
மொறுமொறுப்பான பாகற்காய் பொரியல் செய்ய ஒரு யோசனை இதோ... பாகற்காய்களைப்
பொடியாக அரிந்து வைக்கவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி ஒரு
டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, தனியா, நாலைந்து மிளகாய் வற்றல் இவற்றை
வறுத்து... உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் பொடித்து, பாகற்காய்த்
துண்டுகளுடன் கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கலந்து வைத்துள்ள
பாகற்காயைப் போட்டு நன்கு வதக்கினால்... சுவையான, கசப்பில்லாத, உதிர்
உதிரான பாகற்காய்ப் பொரியல் தயார்!
Post a Comment