கேழ்வரகு - கோதுமை சப்பாத்தி -- சமையல் குறிப்புகள்,
...
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
கேழ்வரகு மாவு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
பால் - கால் கப் சூடு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
• கோதுமை மாவு, கேழ்வரகு மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
• பின்னர் அதில் பால் ஊற்றி பிசையவும்.
• பின்னர் தேவையான அளவு சூடு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
• பின்னர் அந்த மாவை சப்பத்திகளாக சுட்டு எடுக்கவும்.
• இந்த சப்பாத்தி டயட்டில் இருப்பவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது.
Post a Comment