சோயா சங்ஸ் நியூட்ரி சாலட்---சமையல் குறிப்புகள்,

கா லில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடும் இன்றைய பரபரப்பான உலகில், சமையல் செய்வதற்கு ஒதுக்க முடிந்த  நேரத்தில் சத்தான சாப்பாடு தயாரிப்பது என்ப...

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடும் இன்றைய பரபரப்பான உலகில், சமையல் செய்வதற்கு ஒதுக்க முடிந்த  நேரத்தில் சத்தான சாப்பாடு தயாரிப்பது என்பது பலருக்கும் சவால்தான். அதேசமயம், நமது ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தானே ஓடியாடி உழைக்க முடியும். இந்த சவாலை சமாளிக்கும் விதத்தில்... சுவையான, சத்துமிக்க உணவை சுலபமாக செய்து பரிமாற உதவுவதற்காக, ஊட்டச் சத்துக்களின் உறைவிடமான சோயாவில் பலவித உணவு வகைகளை இந்தப் பகுதியில் அளித்து வருகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.
இந்த இதழில் இடம் பெறும் ரெசிபிகள் சோயா சங்க்ஸ் நியூட்ரி சாலட், சோயா கிரானுல்ஸ் வெஜிடபிள் கொத்து பரோட்டா.
சோயா சங்ஸ் நியூட்ரி சாலட்
தேவையானவை: சோயா சங்ஸ் - ஒரு கப், ஆப்பிள் - 3, வறுத்த வேர்க்கடலை - அரை கப், பொடியாக நறுக்கிய மல்லித் தழை - சிறிதளவு, ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன், வினிகர் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகுப்பொடி - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய செலரி கீரை (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - அரை கப், உப்பு - தேவை யான அளவு.
செய்முறை: ஆப்பிளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வேர்க்கடலையை தோல் நீக்கி அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைக்கவும்.
சோயா சங்ஸை வெந்நீரில் 5 நிமிடம் போட்டு வைத்திருந்து, பிறகு நீரை வடித்து குளிர்ந்த நீரில் 2 முறை அலசி பிழிந்து, இரண்டிரண்டாக நறுக்கவும். இதனுடன் வேர்க்கடலை, ஆப்பிள் துண்டுகள், செலரி கீரையைச் சேர்த்துக் கலக்கவும். ஒரு கிண்ணத்தில் ஆலிவ் ஆயில், வினிகர், உப்பு, மிளகுத்தூள், கடுகுப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இதனை சோயா சங்ஸ் கலவையில் ஊற்றி, நன்றாக குலுக்கி கலக்கவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழையை தூவி பரிமாறவும்.
சோர்வு நீக்கி, உடனடி எனர்ஜி தரும் அருமையான சாலட் இது!

Related

அன்னை சப்பாத்தி குருமா! -- சமையல் குறிப்புகள்,

சப்பாத்தி குருமா செய்யத் தேவையான பொருட்கள்: தக்காளி - 100 கிராம், வெங்காயம் - 100 கிராம், கேரட், பீன்ஸ்  150 கிராம், உருளைக் கிழங்கு - 1/4 கிலோ, பூண்டு - 2 , இஞ்சி - ஒரு துண்டு, பச்ச...

கும்பகோணம் ஏர் பரோட்டா! --- சமையல் குறிப்புகள்,

தேவையான பொருட்கள்: மைதா மாவு-  1 கிலோ ஜீனி - 50 கிராம் முட்டை - 1 எண்ணெய், பால், உப்பு - தேவையான அளவு செய்முறை: மைதா, பால், ஜீனி, உப்பு, முட்டை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து், நன்றாகப் ...

ரிச்... சாண்ட்விச்! -- சமையல் குறிப்புகள்,

ஒரு காலத்தில் நோயாளிகளின் உணவாய் இருந்த பிரெட், இன்று இளைய தலைமுறையின் விருப்ப உணவாகிவிட்டது. ஸ்நாக்ஸ் கடைகளிலும் இப்போது சாண்ட்விச்தான் செம ஹிட். இது செய்வதும் சுலபம்,...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Jan 22, 2025 2:02:28 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,529

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item