தென்கிழக்கு ஆசியாவில் மலேயா தீபகற்பத்தின் தென்முனையை அடுத்துள்ள தீவு தலைநகரம் சிங்கப்பூர் மலாய், ஆங்கிலம், சீனம் (mandarin) , தமிழ் ...
- தென்கிழக்கு ஆசியாவில் மலேயா தீபகற்பத்தின் தென்முனையை அடுத்துள்ள தீவு
- தலைநகரம் சிங்கப்பூர்
- மலாய், ஆங்கிலம், சீனம் (mandarin) , தமிழ் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன
- உலகின் மிகப் பரபரப்பான இரண்டாவது துறைமுகத்தினைக் கொண்டது
- நாணயம் டாலர்
- 9.08.1965 இல் மலேசியாவிலிருந்து பிரிந்து விடுதலை பெற்று தனிக் குடியரசு நாடானது.
- லீ ஹசியன் லூங் (Lee Hsien Loong) பிரதமராக உள்ளார்.
1819 ஆம் ஆண்டு ஸ்டாம் போர்ட் ராப்பில்ஸ் என்பவரை
ஆங்கில அரசு சிங்கப்பூருக்கு அனுப்பியது. இன்றைய சிங்கப்பூருக்கு
அடித்தளமிட்டவர் இவரே. தமது அறிவாற்றலாலும், திறமையாலும் சுல்தானிடமிருந்து
சிங்கப்பூரைக் குத்தகைக்கு வாங்கினார். ஆங்கிலேயர் துறைமுகம் அமைத்து,
சுங்க வரி, ஏற்றுமதி இறக்குமதி வரிகள் இல்லையென அறிவித்தனர். இதனால் வேகமான
வளர்ச்சியினைக் கண்டு, 1824 இல் நாட்டைச் சொந்தமாக்கிக் கொண்டனர். சூயஸ்
கால்வாய் திறக்கப்பட்டது. சிங்கப்பூர்த் துறைமுகம் அய்ரோப்பாவைத்
தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் பாலமானது.
இரண்டாம் உலகப் போரில் எதிர்பாராத தாக்குதலை நிகழ்த்தி
1942 பிப்ரவரி 15 இல் ஜப்பானியர் கைப்பற்றினர். 3 1/2 ஆண்டுகளுக்குப் பின்
மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சியை நிலைநிறுத்தினர். 31.8.1957 இல் மலேசியாவும்
மலேசியக் கூட்டணியில் இருந்த சிங்கப்பூரும் விடுதலை பெற்ற நாடுகளாகின.
மலேசியக் குடியரசில் ஒரு மாநிலமாகவே சிங்கப்பூர் இருந்து வந்தது. 1963 இல்
இந்தோனேசியா படையெடுத்த போது வலிமையான கூட்டணியில் இருந்தாலும் மலேசியப்
பிரதமர் துங்கு அப்துல் ரகுமானுக்கும், லீ குவான் யூ தலைமையிலான மாநில
அரசுக்கும் முரண்பாடு வளர்ந்துகொண்டே இருந்தது. இனி ஒன்றுபட்டு இருக்க
முடியாது என்ற நிலை - பிரிவினை தவிர்க்க முடியாதது என்ற நிலை உருவானது.
1959 இல் நடைபெற்ற தேர்தலில் லீ குவான் யூ கட்சி
வெற்றிபெற்று லீ பிரதமரானார். சிங்கப்பூர் மலேசியக் கூட்டணியிலிருந்து
விலகியதும் சிங்கப்பூர் தனித்து வாழமுடியாது; மனித வளம் மட்டுமே உள்ளது;
மண் வளம் ஏதுமில்லை என்று உலகமே கூறியது. மனித வளத்தினை மட்டுமே கொண்டு
சிங்கப்பூரை வாழ வைக்க முடியும் என நிரூபித்த பெருமைக்குரியவர் லீ குவான்
யூ.
1965 ஆகஸ்ட் 9 முதல் சிங்கப்பூர் சுதந்திர ஜனநாயக
இறையாண்மை நாடாக விளங்கும் என அறிவித்தார் லீ. உலக நாடுகள் அவையிலும்
காமன்வெல்த் நாடுகள் அவையிலும் உறுப்பு நாடாக விளங்குகிறது.
சிங்கப்பூரின் சிறப்புகள்
நல்ல நாகரிகத்தினைக் கொண்ட மக்களைக் கொண்ட நாடு.
நடைபாதையில் வசிப்பவர்களோ, பிச்சைக்காரர்களோ கிடையாது. சாலைகளில் மேடு
பள்ளங்களையோ, குப்பைக் கூளங்களையோ பார்க்க முடியாது. கழிவுநீர் தேங்கும்
பிரச்சினையும் இல்லை. தண்ணீர், மின்சாரத் தட்டுப்பாடு என்பது
எப்போதுமில்லை. மலேசியாவிலிருந்துதான் தண்ணீரினைக் கொண்டு வருகிறார்கள்.
எந்தச் சிக்கலை வைத்தும் தண்ணீர் தர மறுப்பதில்லை மலேசியா. நடிகர்கள்,
திரைப்படங்கள் உண்டு. ஆனால், விளம்பரத் தட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை.
சுவர்களில் எந்தவிதமான விளம்பரத்தையும் பார்க்க முடியாது. எதிலும் ஒழுங்கு,
தூய்மையைக் கடைப்பிடிக்கின்றனர். ஊழல் முழுவதும் ஒழிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை மதிக்கின்றனர்; சாலை விதிகளைப் பின்பற்றுகின்றனர். சாலை விதிகளை
மீறுவோருக்கு முதலில் தண்டனை கொடுக்கப்படுகிறது. தவறு தொடர்ந்தால் ஓட்டுநர்
உரிமம் ரத்தாகிவிடும். பெண்களிடம் குறும்பு செய்வோருக்குக் கடுமையான
தண்டனை விதிக்கப்படுகிறது. தெரியாமல் யாரேனும் சாலையில் குப்பைகளைப்
போட்டாலும் 500 டாலர் அபராதம் வசூலித்துவிடுவார்களாம். குழந்தைகளைத்
தண்டிக்கும் உரிமை பெற்றோர்களுக்குக்கூடக் கிடையாது.
மொழி
தேசிய மொழியாக மலாயும், ஆட்சி மொழியாக ஆங்கிலமும்
உள்ளன. தேசிய கீதம் முன்னேறட்டும் சிங்கப்பூர் என்ற ஆரம்பத்துடன் மலாய்
மொழியில் இயற்றப்பட்டுள்ளது.
இராணுவம்
பள்ளிப் படிப்பினை முடித்ததும் 3 ஆண்டுகள் கட்டாய
இராணுவப் பயிற்சி பெறுகின்றனர். பின்பு, அவர்கள் விருப்பப்பட்டால்
இராணுவத்தில் தொடரலாம் அல்லது மேல்படிப்பு படிக்கலாம் அல்லது வேலையில்
சேரலாம். சிறப்பாகப் பயிற்சி செய்தவர்களுக்கு வெளிநாடுகளில் பல துறைப்
பயிற்சி பெற அரசு பண உதவி செய்கிறது. எனவே, நவீன ஆயுதங்களுடன் கூடிய
வலிமையான இராணுவத்தைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது.
வேளாண்மை
ரப்பர் தோட்டங்கள் நிறைய உள்ளன. காய்கறி, பழங்கள்
விளைகின்றன. அலங்கார மீன்களை வளர்த்து விற்பனை செய்கின்றனர்.
போக்குவரத்துச் சாதனங்கள், இயந்திரங்கள், கட்டுமானப் பொருள்கள்,
எலக்ட்ரானிக் பொருள்கள் ஆகியன ஏற்றுமதியாகின்றன. சுற்றுலாத் தலங்கள்
புகிட் டிமாக் நேச்சர் ரிசர்வ்Bukit Timah Nature
Reserve) சாங்கி சேபல் மியூசியம் (Changi Chapel Museum), சென்டோசா
அய்லேண்ட் (Sentosa Island), ஜூரோங் பறவைகள் பூங்கா (Jurong Birds Park),
நைட் சபாரி(Night Safari),, பொட்டானிக் கார்டன்.
Post a Comment