வீட்டிலேயே சம்பாதிக்க... ஸ்க்ரீன் பிரின்ட்டிங்! -- வீட்டிலிருந்தே சம்பாதிக்க,

ஹெல்ப் லைன் வாருங்கள்... வழிகாட்டுகிறோம்! பிஸினஸ் கேள்வி - பதில் சு யதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்கள...

ஹெல்ப் லைன்
வாருங்கள்... வழிகாட்டுகிறோம்!
பிஸினஸ் கேள்வி - பதில்

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி. ராமசாமி தேசாய் பதில் அளிக்கிறார்.
''நானும் கணவரும் கல்லூரி அருகில் புத்தகம் மற்றும் ஸ்டேஷனரி கடை வைத்துள்ளோம். கூடுதல் வருமானத்துக்கு வழி செய்யும் சிந்தனையில் இருக்கிறோம். பேனா, ஃபைல், தாம்பூல துணிப்பை போன்றவற்றில் பிரின்ட்டிங் செய்யும் ஸ்க்ரீன் பிரின்ட்டிங் பயிற்சி மற்றும் நேம் கீ செயின் (பிளாஸ்டிக் மாடல்) போடும் முறை, அதற்கான இயந்திரங்கள் கிடைக்கும் இடம் பற்றி கூறமுடியுமா?''
- எஸ்.மெய்யம்மை சுப்பையா, மேலையூர் 
''ஸ்க்ரீன் பிரின்ட்டிங் மூன்று வகைப்படும். குவாலிட்டி முறை, டைரக்ட் முறை, லாஸ் ரன்னிங் ஜாப் என்ற இந்த மூன்று முறைகளிலும், அதற்கு உபயோகிக்கும் ஸ்க்ரீன் வேறுபடும்.
குவாலிட்டி முறை, சில நூறு காப்பிகள் மற்றும் எடுக்கப் பயன்படும். துல்லியமாக இருக்கும். இதற்கு 5 ஸ்டார் ஸ்க்ரீன் உபயோகிக்க வேண்டும். இது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரண்டாவதான டைரக்ட் முறையில், மஞ்சள் பை, 'நான் ஓவன்’ பைகளில் பிரின்ட்டிங் செய்யலாம். இதன் டைரக்ட் ஸ்க்ரீன், மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
மூன்றாவது முறையான 'லாஸ் ரன்னிங்’குக்கு, கிரோன் (Cron) லேயர் ஸ்க்ரீன் உபயோகிக்க வேண்டும். இது நீல நிற ஸ்க்ரீன் ஆகும். அதிக எண்ணிக்கையில் பிரின்ட் செய்ய இது உதவும். ஆக, எது உங்கள் வசதிக்கும் வரும் ஆர்டர்களுக்கும் ஏற்றது என்று யோசித்து, தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
சரி, இனி ஸ்க்ரீன் பிரின்ட்டிங் யூனிட் அமைப்பது பற்றிப் பார்ப்போம். தரமான ஸ்க்ரீன் பிரின்ட்டிங் உபகரணங்களுக்கு பெரிய முதலீடு தேவையில்லை. வெறும் 6,000 ரூபாயிலேயே சாத்தியப்படுத்தலாம். தேவையான உபகரணங்கள்... 2 அடி அகலம், 1 அடி நீளம், 3 அடி உயரம் உள்ள 'எக்ஸ்போசிஸ் பாக்ஸ்'. இதன் மேல்பாகம் கண்ணாடியில் மூடப்பட்டு இருக்கும், உட்பாகத்தில் 4 டியூப் லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கும். நீங்களே தயார் செய்துகொள்ளலாம்,
அல்லது 3,000 ரூபாய் செலவில் வாங்கிக்கொள்ளலாம்.
அடுத்ததாக, எக்ஸ்போசிஸ் ரசாயனக் கலவை ஸ்க்ரீன், இங்க், சட்டம் முதலியவற்றை 1,500 - 2,000 ரூபாய் செலவில் வாங்கிக் கொள்ளலாம். இவை தவிர, ஒரு மர மேஜை. இப்போது உங்கள் ஸ்க்ரீன் பிரின்டிங் யூனிட் ரெடி.
இனி எப்படி ஸ்க்ரீன் தயார் செய்வது என பார்ப்போம். இதற்காக பெரிய பயிற்சி தேவைஇல்லை. முயற்சித்தால் நீங்களாகவே கற்றுக் கொண்டுவிட முடியும். ஆம், வீட்டில் இருந்தே செய்யும் அளவுக்கு மிக எளிமையானதுதான் இதன் செய்முறை.
எந்தப் பொருள் மீது அச்சு தேவையோ, அதற்கான ஸ்க்ரீனை தேர்வு செய்து எடுத்துக்கொள்ளுங்கள். பிரின்ட் செய்ய வேண்டியதை கம்ப்யூட்டர் சென்டரில் வடிவமைத்து, அதை ஸ்க்ரீன் பிரின்ட்டிங் ஸ்க்ரீன் தயார் செய்யும் டிரேஸ் பேப்பரில் பிரின்ட் செய்து கொள்ளுங்கள் (சாதாரண பிரின்டர் மூலமாகவே இதை பிரின்ட் எடுக்க முடியும்). ஸ்க்ரீன் மீது எக்ஸ்போசிஸ் கெமிக்கலை தடவி, காய்ந்த உடன் டிரேஸ் பிரின்ட் செய்த மேட்டரை, ஸ்க்ரீனுடன் இணைத்து எக்ஸ்போசிஸ் பெட்டி யின் கண்ணாடி மீது வைத்து, டியூப் லைட்டுகளை எரியவிட்டு எக்ஸ்போஸ் செய்யவும். சிறிது நேரத்தில் உங்கள் பிரின்ட்டிங் ஸ்க்ரீன் ரெடி!
இரண்டு அல்லது மூன்று நிறங்களிலும் பிரின்ட் செய்யலாம். தேவையான சட்டத்தில் ஸ்க்ரீனை ஒட்டி, தேவையான கலர் இங்க்கை கொண்டு பை மீது ஸ்க்ரீன் பிரின்ட்டிங் செய்யலாம். ஒவ்வொரு பிரின்ட்டிங் முடிந்த உடன் காய வைத்த பின்னரே பைகளை ஒன்றாக அடுக்க வேண்டும்.
இதற்கான பொருட்கள் அனைத்தும் சென்னை, கோவை, திருச்சியில் கிடைக்கும். திருச்சியில் அல்லிமால் வீதியில் பல கடைகள் உள்ளன. 'நான் ஓவன்’ பேக், ஃபைல் பிரின்ட்டிங் செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ள நீங்கள், அதற்கான ஸ்க்ரீனை வாங்கி உபயோகப்படுத்துங்கள். அதிக எண்ணிக்கையில் உற்பத்தியைக் குவிக்க, செமி ஆட்டோமேட்டிக் இயந்திரங்களும் உள்ளன.

 ஒரு லட்சம் முதல் பல லட்சம் வரை விலை இருக்கும். பயிற்சியைப் பொறுத்தவரை, ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் கட்டணப் பயிற்சியை திருச்சி, தஞ்சா வூரில் பெறலாம். மேலும், இந்தப் பொருட்களை விற்பனை செய்பவர்களே பயிற்சிக்கும் ஏற்பாடு செய்வார்கள்.
அடுத்ததாக, நேம் கீ செயின் பற்றி கேட்டிருந்தீர்கள். இதுவும் மிக எளிதான முறைதான். தேவையான பிளாஸ்டிக் கீ செயினை பல்வேறு மாடல்களில் வாங்கிக் கொள்ளுங்கள். அந்த பிளாஸ்டிக் வடிவத்தின் மீது வாடிக்கையாளர்களின் பெயர் பதித்துக் கொடுக்கும் இந்த முறைக்கு, ஒரு ஹேண்ட் பிரஸ் (பெஞ்ச் டைப்) எந்திரம் சிறிய அளவில் கிடைக்கும். அதன் கைப்பிடியை மேலும் கீழும் தளர்த்தினால், எந்திரத்தின் மத்திய பகுதி மேலும் கீழும் வரும். இந்த அமைப்பில் கீழே ஒரு படிவ அச்சும், மேலே பெயர் சேர்த்து மாட்டும் ஒரு அச்சும் சேர்க்க வேண்டும். இந்த அச்சுகளை தனியாக ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்.

 இப்போது உங்கள் பிளாஸ்டிக்கை கீழ் அச்சில் வைக்கவும். மேலே பெயர் பொருந்திய அச்சை 100 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் சூடேற்றுவதற்காக, சூடேற்றும் ஹீட்டரைப் பொருத்திக் கொள்ளுங்கள். பெயர் பொருத்திய டை மற்றும் பிளாஸ்டிக் கீ செயின் இடையில் கோல்ட் ஃபாயிலை வையுங்கள். இப்போது கோல்ட் ஃபாயில் மீது அழுத்தினால், கீ செயினில் உள்ள பிளாஸ்டிக்கில் வாடிக்கையாளரின் பெயர் படிந்துவிடும்.
இந்த எந்திரம், கோல்ட் ஃபாயில் அனைத்தும் சென்னை, திருச்சி, கோவையில் எந்திரங்கள் விற்பனை செய்பவர்களிடம் கிடைக்கும். இதுபோன்ற குறைந்த முதலீட்டில் செய்யும் தொழில்களுக்கு நல்ல வருமானம் உள்ளது. அனைத்து வேலைகளையும் நாமே செய்வதால் லாபமும் அதிகம். எனவே, நல்ல தொழில் செய்ய முடிவெடுத்திருக்கும் உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!''

Related

சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு! வீட்டிலிருந்தே சம்பாதிக்க!!

பப்ஸ், பீசா போன்ற மேற்கத்திய உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்கின்றனர் டாக்டர்கள். குழந்தைகளுக்கு இந்த உணவுகளை பழக்குவதால் அவர்களின் உடல்நலம் கெடும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறத...

50 ஆயிரம் முதலீடு... 10 ஆயிரம் லாபம்! வாழ்க்கையை மீட்டெடுத்த புடவை -- வீட்டிலிருந்தே சம்பாதிக்க,

சிறுதொழில் சிறப்பிதழ்  பெண்கள் எடுத்துச் செய்ய விரும்பும் சிறுதொழில்களில் ஒன்று, புடவை வியாபாரம். அதில் வெற்றியாளராக காலூன்றியிருக்கிறார் காரைக்குடி, ஷோபா. 'இனி, வ...

பாதிக்குப் பாதி லாபம்... அள்ளித்தரும் ஊறுகாய் பிஸினஸ்! ஸ்டெப்ஸ் -- வீட்டிலிருந்தே சம்பாதிக்க,

  ''எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. ரெண்டுபேரும் தலைக்கு மேல வளர்ந்துட்டாங்க. அவங்களோட படிப்பு, எதிர்காலம் பத்தியெல்லாம் யோசிக்கும்போதுதான் வாழ்க்கை பத்தின லேசா ஒரு நட...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Jan 22, 2025 2:07:9 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,531

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item