பருமன் பயமுறுத்துகிறதா? கவலை வேண்டாம். --- ஹெல்த் ஸ்பெஷல்,
பருமன் பயமுறுத்துகிறதா? கவலை வேண்டாம். ...

கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்:
அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது.
வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும் கூட உடல்பருமனுக்குக் காரணங்களாகும். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.
உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்:
இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.
கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.
சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.
பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.
எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.
சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.
நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.
இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி. இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.
இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது. அதாவது, மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும். மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும். ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.
கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணம்:
கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.
கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர். குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போயிவிடும். அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம். குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும். அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம். சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.
கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து (தண்ணீர்க்கு பதிலாக) அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம். நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும். இப்படி செய்ய முடியாதவர்கள் கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு ஆகியவை வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.
சிலர் பழைய உடையை அணியும் அளவுக்கு எடையை குறைக்க வேண்டும் என்று இதுபோன்ற முறையற்ற முறையை பின்பற்றுவார்கள். எனவே இது போன்ற தவறான முறையை பின்பற்றினால் நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும். ஆகவே உடல் எடையை குறைக்க முதலில் நாம் எண்ணும்போது, "உடல் எடை மெதுவாகக் குறைந்தால் போதுமானது" என்று நினைத்து, உடல் எடையைக் குறைக்க முறையான வழிமுறைகளை, சரியாக மேற்கொண்டு வர வேண்டும்.
உடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவு குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். இதற்காக உணவை தவிர்க்கவும் கூடாது. உணவுக் கட்டுப்பாடு இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். சாதாரணமாக, தினமும் 2 கப் சோறு சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும்.
இடைபட்ட நேரத்தில் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிடலாம். அதிலும் சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து, பசி ஏற்பட்டால், அப்போது வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. பழங்கள என்றால் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.
உடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும் ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை ஜிம்மிற்கு சென்று செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்து வெளியேறிவிடும். முக்கியமாக அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை தினமும் 3௦0 முதல் 45 நிமிடம் தொடர்ந்து செய்துவந்தால், உடல் கச்சிதமாக விரைவில் மாறிவிடும்.
சுடு நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்த பானம், உடல் எடையை குறைக்க உதவும் ஒரு ஆரோக்கியமான பானம். இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டிருக்கும், எலுமிச்சையில் உள்ள ஆசிட்டானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இதில் இருக்கும் தேன், எடையை குறைக்க பெரிதும் உதவும். ஆகவே இந்த ஜூஸை தினமும் 3 முதல் 4 முறை சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும்.
உணவில் உப்பை அதிகமாக சேர்த்தால் உடலில் உள்ள தண்ணீர் சத்து குறையும். எனவே உணவை உண்ட பின்பு, அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்து, பின் தொப்பை பெரிதாக காணப்படும். எனவே உணவில் உப்பை அதிகமாக சேர்க்காமல் அதனை குறைப்பதோடு செயற்கை முறையிலான இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் செயற்கை இனிப்புகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும்.
உடலில் உள்ள தொப்பையை குறைப்பதற்காக செய்யும் செயல்களில் முக்கியமானது தண்ணீர் அதிகமாக குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும்.
Post a Comment