தலைவலியைத் தீர்க்கும் யோகா---ஆசனம்,
என்ன காரணம்? தலைவலி ஏற்பட முக்கியக் காரணம், மூளையைச் சுற்றிப் பின்னிப் பிணைந்திருக்கும் நரம்புகளில் ஏ...

ஒற்றைத் தலைவலி, பித்தத் தலைவலி, நீர்க்கட்டுத் தலைவலி, பார்வைக் குறைபாட்டால் வரும் தலைவலி, வெயில் அலைச்சலால் ஏற்படும் தலைவலி என ஏகப்பட்ட 'தலைவலி’கள் உள்ளன. அவ்வப்போது வரும் தலைவலிக்கு நமது மனநிலை மாற்றமே தீர்வு கொடுக்கும். ஆனால், கடுமையாக, தாங்க முடியாத வலியுள்ள தலைவலிகளை இரண்டாம் நிலைத் தலைவலி என்கிறார்கள். அது மூளைக்குள் ஏற்படும் தீவிரமான பாதிப்புகளால் வரக்கூடும். இதற்கு, உடனடி மருத்துவ சிகிச்சை தேவை. 'மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலியின் பாதிப்பு அதிக வீரியமாக இருக்கும். மன அழுத்தம், உடலுக்கு ஒவ்வாத உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது, அதிக வெளிச்சத்தில் உறங்குவது, தூக்கமின்மை, சாப்பிடாமல் இருப்பது, தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களால் இந்த ஒற்றைத் தலைவலி தூண்டப்படும். மைக்ரேன் வருவதற்கு முன் கண் பார்வை மங்குவது, கண்களுக்கு முன் அலை அலையாக மாயத்தோற்றம் ஏற்படுவது, வாந்தி வரும் உணர்வு, சிலருக்கு மயக்கம் ஆகியவை ஏற்படும்.
சைனஸ் காரணத்தாலும் தலைவலி வரும். அலர்ஜி காரணமாகவும் தலைவலி ஏற்படும்.
எதனால் தலைவலி வருகிறது?
அது சாதாரணத் தலைவலியா அல்லது பிரச்னைக்குரிய தலைவலியா என்பதை மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிந்த பிறகே யோகா மூலம் நிவாரண சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். யோகா செய்யும் காலத்திலும் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவுப் பழக்கம்
அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் தினமும் சரியான நேரத்தில் சாப்பிட்டுவிட வேண்டும். அதீத பசியும் தலைவலியைத் தூண்டும். சூடு கிளப்பும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நலம். உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தீர்வு
தலைவலியின் தீவிரத்தைத் தியானம் மற்றும் யோகா குறைக்கும். இதற்கு கழுத்தில் அசைவு கொடுக்கும்படியான ஆசனங்களை மேற்கொள்ள வேண்டும். மூச்சுப் பயிற்சியுடன் சேர்த்து கழுத்து மற்றும் கைகள் அசைவுக்கான பயிற்சிகளையும் தரலாம். வாரத்தில் ஒருநாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால், உடல் சூடு தணியும். எண்ணெய்க் குளியல் பிடிக்காதவர்கள் ஆயில் மசாஜ் எடுத்துக்கொள்ளலாம். கண்களுக்குப் போதுமான ஓய்வு தர வேண்டும். ஆஸ்துமாவுக்குப் பரிந்துரைக்கப்படும் ஷைதலி பிராணாயாமத்தைத் தலைவலிக்கும் செய்யலாம். இதில் கழுத்து அசைவு இருப்பதால், இதைத் தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தலைக்குள் என்ன நடக்கும்?
ஒற்றைத் தலைவலி வந்துவிட்டால், தலை முழுவதும் வலிக்கும். கண் பார்வை மிகவும் மங்கலாக இருக்கும். வெளிச்சத்தையே பார்க்க முடியாது. கண்களையும் திறக்க முடியாது. தலை சுற்றும். சிலருக்கு வார, மாதக் கணக்கில்கூட தொடர்ந்து வலி இருக்கும். ஜலதோஷம், வாந்தி, மயக்கம் போன்றவற்றுடன் சேர்ந்து இந்தத் தலைவலி வரும்.
Post a Comment