அலர்ஜியை தடுப்பது எப்படி? --- ஹெல்த் ஸ்பெஷல்,

அலர்ஜி இருப்பவர்களுக்கு, சில உணவுகள் ஆகாது. அலர்ஜி தரும் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி, அவற்றில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது...

அலர்ஜி இருப்பவர்களுக்கு, சில உணவுகள் ஆகாது. அலர்ஜி தரும் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி, அவற்றில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?
அறிகுறிகள்!

உணவை வாயில் வைத்தவுடன் கூசும். முகச்சுளிப்பு கூட ஏற்படும்.
* சாப்பிட்ட பின், நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம்.
* குரல்வளையில், ஒருவித மாற்றங்களை உணரலாம். வாந்தி ஏற்படும்.
* அடிவயிற்று வலி வரலாம். மூச்சு விடுவதில் தகராறு, பெருமூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
* சிலருக்கு நினைவு இழப்பும் நிகழ்வதுண்டு.
* சில உணவுகள், சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக் கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும். சில உணவுகள், இரண்டு மணி நேரத்திற்குள்ளாக பின் விளைவை உண்டாக்கும்.
* அமெரிக்காவில், 30ல், ஒருவருக்கு அலர்ஜி இருக்கிறது. பெற்றோருக்கு அலர்ஜி இருந்தால், குழந்தைக்கு அலர்ஜி ஏற்பட, 75 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
* அலர்ஜி ஏற்பட்டால், குடல், சுவாசம், தோல், ரத்த செல்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். நோய்த் தடுப்பு மண்டலமும் அலர்ஜியால் பாதிப்புக்கு உள்ளாகலாம்.
* வேர்க்கடலை, பட்டாணிக் கடலை போன்ற பருப்பு வகைகள்தான் அதிக அலர்ஜியை தரக் கூடியவை. இவை, "இம்யுனோகுளோபின்' என்ற ரசாயனத்தைச் சுரந்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யும்.
* முட்டை, பால், வேர்க்கடலை, சோயா, மொச்சை, கோதுமை, முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை வகை போன்ற ஒன்பது வகை உணவுப் பொருட்கள், 90 சதவீதம் அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளாக நிபுணர்கள் பட்டியலிட்டு உள்ளனர்.
இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை, கொட்டை உணவு வகைகளில் அலர்ஜி ஏற்பட்டால், அது வாழ் நாள் முழுவதும் நீடித்திருக்கும். மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

தடுப்பது எப்படி?

அலர்ஜியை தடுக்க சிறந்த வழி, அறிகுறிகளை அறிந்து, அந்த வகை உணவுகளை உறுதியாகத் தவிர்த்து விடுவது நல்லது.
* வெளியில் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், புதிய உணவு வகைகளை சாப்பிட வேண்டாம். வறுக்கப்பட்ட உணவுகள், வேக வைக்காமல் மேற்புறம் மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் சூப், குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சாப்பிட்டபின், பழவகைகளை உண்ண வேண்டாம்.
* அலர்ஜி உடையவர்களுக்காக, தனியாகத் தயாரிக்கப்படும் அலர்ஜியற்ற உணவுப் பொருட்களை உண்ணலாம்.
* நண்பர்கள், விருந்தினர் வீடுகளில், விருந்தோம்பல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், உங்களுக்கான உணவில் தவிர்க்க வேண்டியவை பற்றி கூறி விடுங்கள்.
* பாலிதீன் பேப்பர் மற்றும் விலங்குகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பைகளில் உணவை பொட்டலம் கட்டிப் பயன்படுத்தக்கூடாது. அது ரசாயன மாற்றம் அடைந்து, அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 4054277895452453429

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item