கேழ்வரகு ரொட்டி --- சமையல் குறிப்புகள்,
தேவையானவை கேழ்வரகு மாவு - 300 கிராம் பாசிப்பருப்பு - 40 கிராம் வெல்லம் - 150 கிராம் தேங்காய் - 1 மூடி நெய் - 1 தேக்கரண்டி எண்ணெய் - 400 மி....

கேழ்வரகு மாவு - 300 கிராம்
பாசிப்பருப்பு - 40 கிராம்
வெல்லம் - 150 கிராம்
தேங்காய் - 1 மூடி
நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 400 மி.லிட்டர்
செய்யும் முறை
தேங்காயைத் துருவி நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.
வெல்லத்தைப் பாகாகக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பாசிப்பருப்பைப் பாதி வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவைக் கொட்டி அதில் பாசிப் பருப்பையும் வெல்லப்பாகையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.
இரண்டு மணி நேரம் அதை அப்படியே வைத்துவிட்டு அதன்பிறகு அதை எடுத்து சிறு அடைகளாகத் தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.
1 comment
பிறகு சாப்பிடவும்.
Post a Comment