இஞ்சி கஷாயம்---சமையல் குறிப்புகள்,
தே வையானவை: இஞ்சி - 1 - 2 இன்ச் துண்டு மல்லி விதை - ஒரு தேக்கரண்டி மிளகு - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி பனங...

- இஞ்சி - 1 - 2 இன்ச் துண்டு
- மல்லி விதை - ஒரு தேக்கரண்டி
- மிளகு - அரை தேக்கரண்டி
- சீரகம் - அரை தேக்கரண்டி
- பனங்கற்கண்டு - சுவைக்கு
- துளசி இலை - 10
- ஓம இலை / கற்பூரவள்ளி இலை - 1 - 2
|
இஞ்சியை தோல் நீக்கிக் கொள்ளவும். இலைகளை நீரில் சுத்தம் செய்து கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக இடிக்கவும்.
|
|
இத்துடன் ஒன்றரை கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
|
|
கொதித்து பாதியாக குறைந்ததும் எடுக்கவும்.
|
|
ஒரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும். இத்துடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து கலந்து கொள்ளவும்.
|
|
வெது வெதுப்பாக குடிக்கலாம். இது சளி, இருமல்,
பசியின்மை போன்றவைக்கு நல்ல மருந்து. காலை, மாலை கால் கப் குடிக்கலாம். 2
வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 5 மில்லி கொடுக்கலாம். துளசி மற்றும் ஓம
இலை சேர்த்தால் சளிக்கு மிகவும் நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை.
|
Post a Comment