ராகி (கேழ்வரகு) தோசை --- சமையல் குறிப்புகள்,
தேவையானவை: ராகி ராகி மாவு2 கப் அரிசி மாவு 1 கப் தயிர் 3/4 கப் பச்சை மிளகாய் 3 சீரகம் 1 தேக்கரண்டி வெங்காயம் 2 கொத்தமல்லித்தழை சிறிதளவு...

தேவையானவை:
ராகி
ராகி மாவு2 கப்
அரிசி மாவு 1 கப்
தயிர் 3/4 கப்
பச்சை மிளகாய் 3
சீரகம் 1 தேக்கரண்டி
வெங்காயம் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
பெருங்காய்த்தூள் 1 தேக்கரண்டி
------
செய்முறை:
ராகி மாவு கடைகளில் கிடைக்கும்.இல்லாவிடில் ராகியை வாங்கி காயவைத்து மெஷினில் அரைத்துக்கொள்ளலாம்.
தயிரை நன்கு கடைந்து ராகி மாவு,அரிசிமாவு,தேவையான தண்ணீர்,உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.(ரவை தோசை மாவு பதம்)
கரைத்த மாவில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிப்போடவும்.
சீரகத்தை உள்ளங்கையில் தேய்த்து போடவும்.
பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிப் போடவும்.
தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
அடுப்பில் தோசைகல்லை வைத்து காய்ந்ததும் மாவை கரண்டியால் எடுத்து சுற்றி ஊற்றவும்.
எண்ணையை சுற்றி ஊற்றி நன்கு வெந்ததும் எடுக்கவும்.
ராகி தோசைக்கு தக்காளி சட்னி,பச்சைமிளகாய் சட்னி சிறந்த side dish.
அரிசி கோதுமையை விட ஊட்ட சத்து நிறைந்தது ராகி.
புரதம்,சுண்ணாம்பு,இரும்புச்சத்து.நார்ச்சத்து எல்லாம் நிறைந்தது
Post a Comment