பத்திரப்படுத்தி வைக்க சில தகவல்கள் --- வீட்டுக்குறிப்புக்கள்,
கடையில் மாவு அரைத்து எடுத்ததும் பரவலாக தட்டில் கொட்டி சூடு ஆறிய பின்னரே எடுத்து வைக்க வேண்டும். சூட்டோடு சூடாக எடுத்து வைத்துவி...

உருளைக் கிழங்குகள் முளைவிடாமலிருக்க அவற்றை வைக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் வைக்கவும்.
உலர்ந்த பழங்களுடன் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
உலர் திராட்சையை காற்றுப் புகாவண்ணம் இறுக்கமாக மூடிய பாட்டிலில் ஃப்ரீசரில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும்.
சாம்பார் பொடியை கொஞ்சமாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஏனெனில் அதிக நாட்களுக்கு சாம்பார் பொடியை எடுத்து வைப்பதால் அதன் வாசனையை இழக்கிறது.
அதிகமா அரைத்து விட்டீர்களா? சாம்பார் பொடியை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் எப்போதுமே ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
கொத்த மல்லி இலைகளை நன்றாக ஆய்ந்து சுத்தமாக கழுவி உலர வைத்து காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
சமைப்பதற்கு முன்பு பூண்டை தோல் உரித்து காற்றாட வைத்தால் அதில் சி வைட்டமின் அதிகரிக்கும். அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம். நசுக்கிய பூண்டை நீண்ட நாட்கள் வைத்திருக்கக்கூடாது.
Post a Comment