வாழைப்பூ பொரியல் --- சமையல் குறிப்புகள்,
தே வையானவை: நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப் பயத்தம் பருப்பு - கால் கப் தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 ...

- தேவையானவை:
- நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப்
- பயத்தம் பருப்பு - கால் கப்
- தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 2
- கடுகு - கால் தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
- கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- உப்பு - தேவையான அளவு
|
வாழைப்பூவை சுத்தம் செய்து அதில் உள்ள ஜவ்வை நீக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
|
|
வாழைப்பூவுடன் மஞ்சள் தூள், உப்பு, பயத்தம் பருப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
|
|
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும்.
|
|
அதில் வேக வைத்துள்ள வாழைப்பூ, பருப்பு கலவையை தண்ணீர் வடித்து சேர்த்து கிளறவும்.
|
|
கடைசியில் தேங்காய் துருவல் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
|
|
சுவையான வாழைப்பூ பருப்பு பொரியல் தயார்.
|
Post a Comment