ரைஸ் மலாய் பேடா --- சமையல் குறிப்புகள்,
தே வையானவை: பச்சரிசி மாவு, பனீர் துருவல் - தலா ஒரு கப், பால் - ஒரு லிட்டர், தேங்காய் துருவல் - ஒரு கப், முந்திரி ...

செய்முறை: முதலில் பச்சரிசி மாவை லேசாக வறுக்கவும். இதில் பனீரைக் கலந்து சிறிது சூடான பால் விட்டு, கெட்டியாகப் பிசைந்து தனியே வைக்கவும். தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, 100 கிராம் சர்க்கரை ஆகியவற்றை கலந்து, சிறிது நெய் விட்டு வதக்கி பூரணம் தயாரிக்கவும். அரிசி மாவை சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து, தேங்காய்ப் பூரணத்தை நெல்லிக்காய் அளவு எடுத்து அதனுள் வைத்து உருண்டையாக மூடிக் கொள்ளவும். இப்படியே எல்லாவற்றையும் செய்து கொள்ளவும். பாலில் நீர் விடாமல், ஒரு அகலமான பாத்திரத்தில் விட்டு கொதிக்க விட்டு, மீதமுள்ள சர்க்கரையை சேர்க்கவும். உருண்டைகளை விண்டு போகாதவாறு ஒவ்வொன்றாகப் பாலில் போடவும். வெந்ததும் மேலே வரும். மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும். பின்னர் எசன்ஸ், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதை சூடாகவோ, குளிர வைத்தோ சாப்பிடலாம்.
ரைஸ் மலாய் பேடா: பூரணம் செய்யும்போது சிறிது கோவா சேர்த்தால், சுவை அதிகரிக்கும்.
Post a Comment