மேக்ரோனி சீஸ் சாலட் --- சமையல் குறிப்புகள்,
மேக்ரோனி சீஸ் சாலட் தேவையானவை: மேக்ரோனி (வேக வைத்தது) - 200 கிராம், தக்காளி - 3, கேரட் - 2, குடமிளகாய் - 2, வினிகர் அல்லது எலுமிச்சைச் ...

செய்முறை: கோஸை லேயர், லேயராக எடுத்து அரை வேக்காடாக வேக வைக்கவும். காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். வேக வைத்த மேக்ரோனியுடன், நறுக்கிய தக்காளி, கேரட், குடமிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, உப்பு, மிளகுத்தூள், வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு, சீஸ் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நறுக்கிய மல்லித்தழையை தூவவும். வேக வைத்த கோஸ் லேயர்களில் சாலட்டை வைத்து பரிமாறவும். சத்துமிக்க இந்த சாலட், சுவையாகவும் இருக்கும்.
மேக்ரோனி - சீஸ் சாலட்: கலர் குடமிளகாய் பயன்படுத்தினால், சாலட் பார்வைக்கு மேலும் அழகாக இருக்கும்.
2 comments
ரெசிபிக்கும் படத்துக்கும் ???
அன்பு நெஞ்சம் பழனி கந்தசாமி அவர்களுக்கு அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி வரையும் மடல். நிற்க ! தாங்கள் சுட்டிக்காட்டி குறிப்புகளுக்கு உரிய படங்கள் மாறிவிட்டது. தற்போது சரி செய்யப்பட்டு சரியான படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நன்றிகள் பல.
Post a Comment