உங்கள் 'க்ளைம்' உங்கள் கையில்...இன்ஷூரன்ஸ்,
உங்கள் 'க்ளைம்' உங்கள் கையில்... ந ம் நாட்டில் பாலிசி எடுப்பவர்கள் மிகவும் குறைவு. அதிலும், நாம் செய்யும் சிறிய தவறுகளால் ...

https://pettagum.blogspot.com/2012/10/blog-post_6625.html
உங்கள் 'க்ளைம்' உங்கள் கையில்...
சம்பவம் 1:
கதிரேசனுக்கு மாரடைப்பு. பதறிப்போய் அருகில் இருக்கும் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். சிகிச்சை ஆரம்பித்தது. அவருக்கு மருத்துவக் காப்பீடு உண்டு. அதனால், காப்பீட்டு நிறுவன அதிகாரிகளுக்கும் தகவல் சொல்லப்பட்டு கதிரேசனை மருத்துவனையில் அனுமதித்தற்கான ஆவணங்கள், சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அனுப்பப்பட்டன. அனைத்தும் சரியாக இருந்தும்கூட க்ளைம் கிடையாது என்று நிராகரித்துவிட்டார்கள். காரணம்... காப்பீட்டு ஆவணங்களில் இருந்த பெயரும் மருத்துவமனையின் ஆவணங்களில் இருந்த பெயரும் வேறு வேறாக இருந்தது. மருத்துவமனையில்
சம்பவம் 2:
ஆவணப்படுத்தியதில் நடந்த தவறுதான் இதுவும். ஒரு சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும்போது, உங்களுக்கு இந்த பிரச்னை எத்தனை நாட்களாக இருக்கிறது என்று கேட்டதற்கு 5 மாதங்கள் என்று சொல்லி இருக்கிறார் நோயாளி. ஆனால், அதை ஆவணப்படுத்தும்போது 5 வருடங்கள் என்று டிக் செய்துவிட்டார். இந்த 'ஒரு டிக்’தான் மொத்த க்ளைமும் நிராகரிக்கக் காரணமாகிவிட்டது. பாலிசி எடுத்தே 4 வருடங்கள்தான் ஆகிறது. அதற்கு முன்பே உங்களுக்கு இந்த நோய் இருக்கிறது. அதனால், க்ளைம் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
சம்பவம் 3:
'கடந்த சில வருடங்களாகவே லேசான நெஞ்சு வலி இருந்தாலும், மாரடைப்பு வருவது இதுதான் முதல் முறை’ - இது மருத்துவர் கொடுத்த அறிக்கை. ஆனால், 'கடந்த சில வருடங்களாக நெஞ்சு வலி’ என்ற வார்த்தைகளை மட்டும் படித்துவிட்டு, க்ளைம் இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள். அதன் பிறகு மீண்டும் மேல் முறையீடு செய்து அபராதத்துடன் க்ளைம் வாங்கப்பட்டது.
இவை எல்லாம் சாம்பிள்தான். இதுபோல் க்ளைம் நிராகரிக்கப்பட பல காரணங்கள் இருக்கின்றன. முதல் விஷயம்... க்ளைம் நிராகரிக்கப்பட்டால் பதற்றப்பட வேண்டாம். என்ன காரணம், யார் காரணம் என்று ஆராய்ச்சி செய்யுங்கள். அதைவிட முக்கியம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எங்கு பாலிசி எடுத்திருக்கிறோம், க்ளைம் வாங்க யாரை அணுகுவது, பணம் எங்கு இருக்கிறது அல்லது எப்படித் திரட்டுவது உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்துவைத்திருப்பது அவசியம். காரணம், நோயாளி நிம்மதியாக உள்ளே இருப்பார். வெளியே இருப்பவர்கள்தான் இத்தனை வேலைகளையும் செய்ய வேண்டும். யார் உள்ளே, யார் வெளியே என்பது நம் கையில் இல்லையே?
Post a Comment