எள் சாண்ட்விச் பர்ஃபி---சமையல் குறிப்புகள்,
எள் சாண்ட்விச் பர்ஃபி தேவையானவை: கல் நீக்கி வறுத்த எள் - ஒன்றேகால் கப், வறுத்த வேர்க்கடலை - ஒரு கப், பொட்டுக்கடலை - அரை கப், ஏலக்காய்த...
https://pettagum.blogspot.com/2012/10/blog-post_3599.html
எள் சாண்ட்விச் பர்ஃபி
தேவையானவை: கல் நீக்கி வறுத்த எள் - ஒன்றேகால் கப், வறுத்த வேர்க்கடலை - ஒரு கப், பொட்டுக்கடலை - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை ஸ்பூன், பொடித்த வெல்லம் - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: ஒரு தட்டில் நெய் தடவி, பாதி அளவு எள்ளைப் பரவலாகக் கொட்டி வைக்கவும். வேர்க்கடலையைத் தோல் நீக்கி ஒன்றிரண்டாக பொடிக்கவும். அத்துடன் பொட்டுக்கடலை, ஏலக்காய்த்தூள் கலந்து வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி, பாகு காய்ச்சவும். கம்பிப் பதம் வந்ததும் கடலை கலவையை அதில் கொட்டிக் கிளறவும். அது சுருண்டு வரும்போது தட்டில் உள்ள எள்ளின் மீது கொட்டி கரண்டியால் சமமாகப் பரப்பி, மேலே மீதமுள்ள எள்ளைக் கொட்டி ஒரே சீராகப் பரப்பவும். சற்று ஆறியதும் துண்டுகள் போடவும்.
மேல்புறமும் கீழ்புறமும் எள், நடுவில் கடலை என இந்த எள் சாண்ட்விச் பர்ஃபி பார்க்க அழகாகவும், சாப்பிட சூப்பராகவும் இருக்கும்.
Post a Comment